செவ்வாய், 4 ஜூலை, 2017

நடராஜன் :ஜெயலலிதா பன்னீர்செல்வத்தை வீட்டுக்காவலில் வைத்திருந்தார் ....மறுக்கிறார் பன்னீர்

Kalai Mathi சென்னை: ஜெயலலிதா தன்னை வீட்டுக்காவலில் வைத்திருந்ததாக
சசிகலாவின் கணவர் நடராஜன் கூறியிருப்பது வடிகட்டிய பொய் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் நடராஜன் கூறியிருப்பது வடிகட்டிய பொய் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு முன்னாள் அமைச்சர்கள் பரஞ்சோதி, பூனாட்சி, மருத ராஜா எம்.பி, முன்னாள் எம்.எல்.ஏ. ரெத்தினவேலு உள்ளிட்ட பலர் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அ.தி.மு.க. சட்ட விதிகளின்படி இரட்டை இலை சின்னம் எங்களுக்குதான் கிடைக்கும் என்றார். ஜெயலலிதா ஆசியுடன் இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். மேலும் ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த போது தன்னை வீட்டு காவலில் அடைத்து வைத்து இருந்ததாக ம. நடராஜன் கூறியதற்கு ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்துள்ளார். நடராஜன் கூறியிருப்பது வடி கட்டிய பொய் என்றும் அவர் கூறினார்.tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக