ஞாயிறு, 9 ஜூலை, 2017

மேற்கு வங்கம் போஜ்பூரி சினிமா காட்சியை உண்மையான கலவரமாக பாஜாகவின் விஷம பிரசாரம் ங்களும்


visil : கலவரங்கள் தான் பாரதிய ஜனதாவின் உயிர்மூச்சு. இராமர் பாபர் மசூதி உள்ள இடத்தில் தான் பிறந்தார். அதே இடத்தில் தான் அவருக்கு கோயில் கட்ட வேண்டும் என்ற அடாவடியில் பிறந்த இயக்கம் அது. இராமர் கோயிலை இது வரை பாரதிய ஜனதாவினர் கட்டவில்லை. அதற்கான எந்த நோக்கமும் அவர்களுக்கு இல்லை. ஆனால் இராமர் கோயிலை கையில் எடுத்ததற்கான  மறைமுகமான நோக்கம் நிறைவேறி விட்டது . அது அதிகாரத்தினை ருசி பார்ப்பதற்கான ஆசை.  இராமர் கோயில் பிரச்சனை மூலம் உத்திரப் பிரதேசத்திலும் மத்தியிலும் பாரதிய ஜனதா ஆட்சியில் அமர்ந்தது.

இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் காலூன்றி  இந்தியாவை இந்துஸ்தான் – ஹிந்திஸ்தான் – மாட்டுஸ்தான் ஆக மாற்றுவது தான் பாரதிய ஜனதாவின் தலைவர் மோடியின் லட்சியம். மோடியின் இந்துஸ்தான் பாரதிய ஜனதா ஆதரவு கார்ப்பரேட்களின் கம்பனிகள் ஆட்சி ஒன்றினை இந்தியாவில் உருவாக்கும். அந்த இந்தியாவில் என்ன சாப்பிட வேண்டும், யாரிடம் கல்வி கற்க வேண்டும் என்ன கல்வி கற்க வேண்டும் என்ன பாடலை பாட வேண்டும், எந்தப் பாடலிற்கு யார் யார் எப்படி எழுந்து நிற்க வேண்டும் என்பதை அரசாங்கம் தீர்மானிக்கும். அரசாங்கம் என்ன தீர்மானிக்க வேண்டும் என்பதை கார்ப்பரேட்கள் சொல்வார்கள்.
2014ல்  ஒரு மாபெரும் அலையில் மிதந்து வெற்றிக் கொடி நாட்டிய மோடியின் வெற்றிப் பயணம் செல்லாக்காசாக்கல் திட்டம் தவிடு பொடியானதை அடுத்து தடுத்து நிறுத்தப்படும் என்று ஒரு கருத்து நிலவியது. ஆனால் உத்தரப் பிரதேசத்தில் நிலவிய மும் முனைப் போட்டி காரணமாக பாரதிய ஜனதா ஒரு எளிய வெற்றியைப் பெற்றது. இது பாரதிய ஜனதா வலுவில்லாத மாநிலங்களில், காங்கிரஸ் அல்லாத மாநிலக் கட்சிகள் வலுவாக உள்ள இடங்களிலும் பாரதிய ஜனதா தன்னுடைய பார்வையை திருப்ப உதவியது.
பாரதிய ஜனதா பாதம் பதிக்க கடினமாகப் போராடும் இரண்டு மாநிலங்கள் மேற்கு வங்காளமும், தமிழகமும். இரண்டு மாநிலங்களும் ஒப்பீட்டளவில் மற்ற மாநிலங்களை விட பாரதிய  ஜனதாவை விலக்கி வைத்திருக்கும் மாநிலங்கள். பாரதிய ஜனதாவின் இந்து சித்தாந்தத்தினை ஏற்றுக் கொள்ள மறுக்கும் மாநிலங்கள். தமிழ்நாட்டில் இந்துக்களின் பெரும்பான்மை அறுதியானது. முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் மிகக் குறைவாகவே வாழ்கின்றார்கள். முஸ்லீம்களால் ஆபத்து என்ற பாரதிய ஜனதாவின் பிரச்சாரம் முஸ்லீம்கள் அதிகம் வாழும் கோயமுத்தூர் போன்ற பகுதிகளில் அல்லது இந்துக்கள் எண்ணிக்கை குறைவாக  இருக்கும் கன்யாகுமரி போன்ற பகுதிகளில் தாக்கத்தினை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த சில வருடங்களாக பாரதிய ஜனதாவினர் சிலர் பல காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டனர். அவற்றில் முஸ்லிம்களை தொடர்பு படுத்தி பாரதிய ஜனதாவினர் செய்த பிரச்சாரங்கள் தமிழ்நாட்டில் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்த வில்லை. தமிழ்நாட்டு அரசியலில் உடனடியாக தேர்தலிற்கான சூழ்நிலைகள் இல்லாததால் பாரதிய ஜனதாவினர் அமைதி காக்கின்றனர்.
தற்போது மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதாவினர் தங்களுடைய வேலைகளை தொடங்கி உள்ளனர்.  பாரதிய ஜனதாவினர் கலவரங்களைத் தூண்டி விட பயன்படுத்தும் ஒரு உத்தி ஏதாவது கலவரப் புகைப்படங்களை பயன்படுத்தி இந்துக்கள் கொல்லப்பட்டார்கள், கற்பழிக்கப்பட்டார் என்று செய்திகளைப் பரப்புவது. அதற்கு கூச்சப்படாமல் தற்போது சினிமாப் படங்களை கூட பயன்படுத்துவது பாரதிய ஜனதாவினருக்கு கை வந்த கலை ஆகி விட்டது. மேற்கு வங்க கலவரம் தொடங்கியவுடன் ஒரு பாரதிய ஜனதா சமூக ஊடகச்  பொறுப்பாளர்  தனது முக நூலில் பதிவிட்ட செய்தியை கீழே பாருங்கள்.
” படுரீயாவில் இந்துப் பெண்கள்  பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள். திரிணாமூல் காங்கிரஸினை ஆதரிக்கும் இந்துக்களே நீங்கள்  இந்துக்கள் தானா ? இந்து அப்பாவிற்கு பிறந்திருந்தால் நீங்கள் கர்ஜனை செய்து கிளம்பியிருப்பீர்கள். மேற்கு வங்காளத்தின் அனைத்து இந்துக்களும் ஒன்று படவேண்டும் ” இவ்வாறு அந்தப்பதிவு சொல்கின்றது. ( “In Baduria, Hindu women are getting molested. Hindus, who are still supporting TMC, are you Hindu? If you are born of a Hindu father, then you will roar against these radicals. All Hindus of West Bengal must unite.” – ALTNews )  விவரனைகளுடன் இணைக்கப்பட்ட படம் ஒரு போஜ்புரி சினிமாப் படக்காட்சி.  https://t.co/XMH9fIgiFS இந்த  தளத்தில் ஒரிஜினல் போஜ்புரி வீடியோவை நீங்கள் காணலாம் 
            பாபாதோஷ் சாட்டர்ஜி என்ற அந்த நபரின் பதிவு சமூக வலைத்தளங்களில் விசமாக பரவி கலவரம் பெரிதாக காரணமானது. இது போன்ற பல பழைய கலவரப்புகைப்படங்களில் வன்முறையைத் தூண்டும் விவரனைகளுடன் பதிவிடப்படுவது கலவரங்கள் கொழுந்து விட்டெரியக் காரணமாகின்றது.
பாரதிய ஜனதா செய்தித் தொடர்பாளர் நுபுல் சர்மா போலிப் புகைப்படங்கள் அடையாளம் காணப்படுவது பற்றிக் கவலைப்படாமல் 2002 குஜராத் கலவர புகைப்படத்தை மேற்கு வங்க கலவர புகைப்படமாக வெளியிட்டு ட்வீட்டரில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார். 
இந்த புகைப்படம் 2002 குஜராத் கலவரப் புகைப்படம். ஆசை வெட்கமறியாது, மக்கள் படும் துக்கம் அறியாது. எப்படியாவது பதவிக்கு வர வேண்டும். யார் செத்தால் எனக்கென்ன என்று பாரதிய ஜனதா அரசியல்வாதிகள் செயல்படுகின்றார்கள். மக்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு சாகின்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக