ஞாயிறு, 2 ஜூலை, 2017

கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவும், வசதியானவர்களுக்காகவும் பாஜகவினர் போராடுகின்றனர்: மீராகுமார் பேச்சு

பாஜகவினர் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவும்,
வசதியானவர்களுக்காகவும் போராடுகின்றனர் என்று குடியரசுத் தலைவர் தேர்தல் எதிர்க்கட்சி வேட்பாளர் மீராகுமார் கூறியுள்ளார். காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்களை சந்தித்து புதுச்சேரியில் மீரா குமார் இன்று ஆதரவு திரட்டினார். அதற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''ஒடுக்கப்பட்ட மக்கள் நலனுக்காகவும், மதச் சார்பின்மை, மற்றும் கருத்து சுதந்திரத்திற்காகவும் எனக்கு வாக்களிக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கும் , எனக்கும் இடையிலான மோதல் கொள்கை ரீதியான போராட்டமாக கருதுகிறேன்.
நாங்கள் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை பிரிவு மக்களுக்கு குரல் தரும் அணியாக உள்ளோம். எதிரணியான பாஜகவினர் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவும், வசதியானவர்களுக்காகவும் போராடுகின்றனர். நாடு இப்போது உள்ள சவாலான சூழ்நிலையில், எந்த சிக்கலும் இல்லாமல் இருக்க எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இத்தேர்தலில் வலுவான போட்டியை நான் உருவாக்கியுள்ளேன்'' என்றார் மீராகுமார்.tamilthehindu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக