ஞாயிறு, 2 ஜூலை, 2017

கதிராமங்கலம் போராட்ட குழு சென்னையில் முற்றுகை? போலீஸ் குவிப்பு

சென்னை: கதிராமங்கலம் மக்கள் தலைமைச் செயலகத்தை
முற்றுகையிடப்போவதாக வெளியான தகவலையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் பழனிசாமி இல்லம் மற்றும் ஆளுநர் மாளிகையிலும் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம், கதிராமங்கலம் கிராமத்தில் இயற்கை மற்றும் எரிவாயுக் கழகம், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஆய்வு மேற்கொள்ள குழாய்கள் பதிக்கும் பணியைச் செய்துள்ளது. விளை நிலத்தில் எண்ணெய் குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இதையடுத்து கதிராமங்கலம் கிராமத்தில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கதிராமங்கலம் மக்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடப்போவதாக வெளியான தகவல் காரணமாக தலைமைச் செயலகம் மற்றும் முதல்வர் வீடு, ஆளுநர் மாளிகை உள்ளிட்ட இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக