வியாழன், 20 ஜூலை, 2017

கலைஞர் கைது . ஜெயாவின் வெறியாட்டம் .. கண்டித்த ஒரே ஒரு சினிமா நடிகன் கமலஹாசன்!

Saravanan Savadamuthu: கலைஞர் கருணாநிதியை நடு இரவில் ஜெயாவின் அடியாள் போலீஸ் முத்து கருப்பனும் முகமது அலியும் கைது செய்த வரலாறு நாடு அறிந்ததுதான் .  சுதாகரன் திருமணம் மற்றும் ஏராளமான சொத்து குவிப்பு டான்சி முறைகேடு போன்ற வழக்குகளால் கலைஞர் மீது அவர் கொண்ட கோபம் அவரை ஒரு வெறி பிடித்தவராக ஆக்கியிருந்தது . இறுதிவரை அந்த வெறி அடங்கவே இல்லை .   எதுவித முகாந்திரமும் இல்லாத ஒரு பொய்யான குற்றச்சாட்டில் கலைஞர்  நட்ட நடு இரவில்கைது செய்யப்பட்டார்.
அப்படி அராஜகமாக கைது செய்யப்பட்டபோது "சட்டம் தன் கடமையைச் செய்தது..." என்றார் வைகோ. "தி.மு.க. ஆட்சிக் காலத்தில் என்னையும் ஒரு நாள் இப்படித்தான் விடியற்காலையில் வந்து எழுப்பி கைது செய்தார்கள்..." என்று சப்புக் கட்டு கட்டினார் ராம்தாஸ்.. சூப்பர் ஸ்டார் ரஜினி வாயே திறக்கவில்லை. சோ ராமசாமியோ சட்டத்தின் முன்  அனைவரும் சமம் என்ற பொன் மொழியை உதிர்த்தார் .
"முத்தமிழ்வித்தகர்", "தமிழ்ச் சினிமாவின் முன்னோடி", "எங்களது கலையுலக பிதாமகன்" என்று தாத்தாவை அவருடைய கைதுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய தமிழ் சினிமா துறையின் அனைத்து சங்கங்களும் இந்த நேரத்தில் கையது, வாயது பொத்தி அமைதி காத்தன. ஆனால் அன்று மதியமே தன் வீட்டுத் தோட்டத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த கமல்ஹாசன்.. "மூன்று முறை முதல்வராக இருந்த ஒரு பெரிய மனிதருக்கு சட்டப்படி அவருக்கு இருக்கும் உரிமையின்படி தனது கருத்தைச் சொல்வதற்கும், பேசுவதற்கும்கூட வாய்ப்பு வழங்கப்படாதது ஜனநாயகத்திற்கு விரோதமானது.." என்று கலைஞர்  கைதை வெளிப்படையாகவே கண்டித்தார்.

இதுபோல் தி.மு.க. சார்பானவராக கமல்ஹாசன் காட்சியளித்தது சந்தர்ப்பங்களால்தானே ஒழிய.. அரசியலால் அல்ல..!
"எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளியென்று பார்த்துதான் அடுப்பைப் பற்ற வைக்க வேண்டும்..." என்று 2011 தேர்தலின்போது சொன்னார் கமல்ஹாசன்..!
ஆனால் மக்கள்தான் வாங்குவதை வாங்கிக் கொண்டு "எல்லாம் எனக்குத் தெரியும். பொத்திக்கிட்டு போ அங்கிட்டு..." என்று சொல்லி வாக்குகளை விற்றார்கள். பின்பு வசமாக அனுபவித்தார்கள்..! இப்போதும் அனுபவிக்கிறார்கள்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக