ஞாயிறு, 30 ஜூலை, 2017

தினமலர் : மதிமுகவை வரவேற்க திமுக தயாராகிறது?

நெருங்கும், ம.தி.மு.க., வரவேற்கும்,தி.மு.க.,,ஸ்டாலின் வியூகம்,எடுபடுமா?"பொதுக்கூட்டங்களில், ம.தி.மு.க.,வை விமர்சிக்க வேண்டாம்' என, பேச்சாளர்களுக்கு, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் உத்தர விட்டுள்ளதும், அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வு களும், தி.மு.க.,விடம், ம.தி.மு.க., நெருக்கம் காட்டி வருவதை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளன. தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பேரன், அருள்நிதி திருமண விழா, 2016 சட்டசபை தேர்தலுக்கு முன், சென்னை, அறிவாலயத்தில் நடந்தது. அதில், பங்கேற்ற வைகோவிற்கு உரிய மரியாதை தராமல் அலட்சியப்படுத்தி யதால், தி.மு.க., கூட்டணியில், வைகோ இடம் பெற மறுத்து விட்டார். தேர்தல் நேரத்தில், மூன்றாவது அணியையும் உருவாக்கினார். இதனால், தி.மு.க., கூட்டணி ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதை உணர்ந்த, ஸ்டாலின், ம.தி.மு.க.,வை, பகைத்துக் கொள்ள வேண்டாம் என்ற, முடி வுக்கு வந்துள்ளார். அதனால், 'தி.மு.க., மேடை யில், ம.தி.மு.க.,வை விமர்சித்து பேசக்கூடாது' என, பேச்சாளர்களுக்கு, சில நாட்களுக்கு முன், ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


மனமாற்றம்:
மலேசியா நாட்டின்
விமான நிலையத்தில், வைகோவை அவமரியாதை செய்த விவகாரத்தை கண்டித்து, முதல் நபராக, ஸ்டாலின் அறிக்கை விடுத்தார். அவரது அறிக்கை, வைகோ விற்கு மனமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆக., 11, 12ல் நடைபெற உள்ள, 'முரசொலி' நாளிதழ் பவள விழாவில், வைகோபங்கேற்க வேண்டும் என, ஸ்டாலினின் துாதராக, ஆர்.எஸ்.பாரதி சென்று பேசிய போது, வைகோ, 'தவிர்க்க இயலாத காரணத்தால் வர முடிய வில்லை' என கூறிவிட்டு, விழா மலருக்கு வாழ்த்து செய்தியை எழுதிக் கொடுத்துள்ளார்.

தி.மு.க., விவசாய அணியின் மாநில செயலர், கே.பி.ராமலிங்கம் தலைமையில் செயல்படும், இயற்கை விவசாய அமைப்பின் சார்பில், விவசாயி கள் பிரச்னைகளுக்காக, நாளை மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்டம் நடக்கிறது.இதில், ம.தி.மு.க.,வினர் பங்கேற்க வேண்டும் என, வைகோவுக்கு அழைப்பு விடுக்க, ஜூலை, 14ல், சென்னை, எழும்பூரில் உள்ள தாயகம் அலுவலகத்திற்கு, கே.பி.ராமலிங்கம் வந்தார்.

உத்தரவு

அவரை, ம.தி.மு.க., மாநில துணைப் பொதுச்செய லர், மல்லை சத்யா வரவேற்று, அழைப்பிதழை பெற்றுள்ளார். மாவட்ட வாரியாக நடைபெற வுள்ளஆர்ப்பாட்டத்தில், ம.தி.மு.க.,வினர் பங்கேற்க, வைகோவும் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடை யில், ம.தி.மு.க.,வில் இருந்து மாநில நிர்வாகிகளையும், தொண்டர்களையும், தி.மு.க., விற்கு இழுக்க, ஸ்டாலினிடம் இளைஞர் அணியை சேர்ந்த மாநில நிர்வாகி ஒருவர் அனுமதி கேட்டுள் ளார். அதற்கு ஸ்டாலின், 'ம.தி.மு.க.,வினர் யாரையும், தி.மு.க.,வில் சேர்க்கும் காரியத்தில் ஈடுபட வேண்டாம்' என, கூறியுள்ளார்.

அதனால் தான், 'நீட் தேர்வுக்கு, தமிழகத்தில் விலக்கு அளிக்க வேண்டும்' என, வலியுறுத்தி, தி.மு.க.,வின் மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், சிலர் வழக்கு தொடுத்ததற்கு, வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இப்படி மெல்ல மெல்ல தி.மு.க., பக்கம், ம.தி.மு.க., நெருங்கி வருகிறது. அதே சமயம், ம.தி.மு.க., வை வரவேற்கவும், தி.மு.க., தயாராகி வருகிறது.
செப்., 15ல், தஞ்சாவூரில், அண்ணாதுரையின் பிறந்த நாள் விழா மாநாடு, ம.தி.மு.க., சார்பில்
நடக்கிறது. இதில், தொண்டர்களின் மன உணர் வுக்கு மதிப்பளிக்கும் வகையில், கூட்டணி குறித்த அறிவிப்பை, வைகோ வெளியிட திட்ட மிட்டுள்ளார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக