வியாழன், 6 ஜூலை, 2017

திரையரங்க வேலை நிறுத்தம் முடிவு ... 28 ஜி எஸ் டி கட்டணம் வசூலிக்கப்படும் ...

திரையரங்க உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்! கேளிக்கை வரிக்கு எதிராக திரையரங்க உரிமையாளர்கள் நடத்தி வந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. கடந்த திங்கட்கிழமை முதல் நடைபெற்று வந்த திரையரங்க உரிமையாளர்கள் போராட்டம் இன்று மாலை அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது. தலைமை செயலகத்தில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் சினிமா வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன், போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளோம். தியேட்டர் உரிமையாளர்களின் சிரமங்களை அமைச்சர்கள் புரிந்து கொண்டனர். நாளை காலை முதல் தியேட்டர்கள் வழக்கம் போல் இயங்கும். வழக்கமான டிக்கெட் கட்டணமே இருக்கும். வழக்கமான கட்டணம் மற்றும் 28 சதவீதம் ஜிஎஸ்டி மட்டுமே வசூலிக்கப்படும். திரைத்துறையினர் சார்பில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். தொடர்ந்து பேச அரசு தரப்பில் ஒரு குழுவும், திரை துறையினர் சார்பில் ஒரு குழுவும் அமைக்கப்படும். ஒரு நாளுக்கு ரூ.20 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக