வெள்ளி, 14 ஜூலை, 2017

தமிழகம் 2011 இல் தொழில்கள் தொடங்க முதல் மூன்று இடங்களில் .. 2015 இல் கடைசி மூன்று இடங்களில்

Special Correspondent FB டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற மாநிலத் தலைமைச்
செயலாளர்கள் கூட்டத்தில் நிதி ஆயோக் அமைப்பின் தலைமை அதிகாரி அமிதாப் காந்த் கலந்து கொண்டார்.அப்போது அவர் பேசியதாவது:
தொழில் மற்றும் வணிகம் புரிவதற்கு உகந்த மாநிலங்களில் ஆந்திரா, தெலங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்கள் முதல் 3 இடங்களில் உள்ளது. இப்பட்டியலில் தமிழகம், கேரளா, அசாம் ஆகியவை கடைசி 3 இடங்களில் உள்ளது.
உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் 2.42 லட்சம் கோடிகள் பெற்று இந்தியாவிலே அதிகளவில் முதலீடு செய்துள்ளன என்று ஜெயலலிதா 2015 ஆண்டுசட்டமன்றத்தில் சொன்னார் . இதனால் வேலை வாய்ப்பு அதிகளவில் பெருகியுள்ளது என ஆளும் அதிமுக பெருமை பேசி வந்த வேளையில் இந்த அறிவிப்பு பலர்க்கும் அதிர்ச்சியை தந்துள்ளது ..
தொழில் வளர்ச்சி திமுக ஆட்சி காலத்திலே அதிக பட்சமாக 13.12 #GDP இருந்து ., முதல் முன்று இடத்திலே இருந்த தமிழகம் இப்போது கடைசி முன்று இடத்திலே என்று மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெவிக்கின்றன என்று பொருளாதர வல்லுநர்கள் கூறுகிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக