ஞாயிறு, 11 ஜூன், 2017

RSS குண்டர் தலைவன் மோகன் பகவத் குடியரசு தலைவரா?

பாஜக-வின் கூட்டணிக் கட்சியான சிவசேனா எப்படியாவது “ஹிந்துத்துவா ரப்பர் ஸ்டாம்பை” குடியரசுத் தலைவர் மாளிகையில் பொருத்த வேண்டும் என்று துடிக்கிறது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை குடியரசுத் தலைவராக்க வேண்டும் என்று சிவசேனா தொடர்ந்து பேசுகிறது.
சிவசேனாவின் பத்திரிகையான சாம்னாவில் இதையே தொடர்ந்து எழுதுகிறார்கள். “இந்து ராஷ்டிரம் தான் இந்த நாட்டின் விதி என்பதை கொண்டு வரும் தகுதி உள்ள நபரே தேசத்திற்கு தேவை. அவர்தான் ராமர் கோவில், 370-வது சட்டப் பிரிவு போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பார். இதுவரை மதசார்பின்மை ரப்பர் ஸ்டாம்புகள் தான் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியிருந்தன. தற்போது அதை நாம் மாற்றவேண்டும்” என்று தலையங்கத்தில் கூறுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சிவசேனா தொடர்ந்து மோகன் பாகவத்தை தெரிவு செய்ய வேண்டும் என்று கூறினாலும் பகவத் தனக்கு அதில் விருப்பம் இல்லை என்று கூறியிருக்கிறார். ஒரு காலத்தில் அரசியலே சாக்கடை என்று வருணித்த சங்க பிரச்சாரக்குகள் இன்று மேகலாயவில அந்தப்புர லீலைகள் புரியும் சண்முகநாதனாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். இங்கேயும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் எங்களுக்கு ஆர்.எஸ்.எஸ்-ல் தான் வேலை, அரசிடம் இல்லை என்று கூறவில்லை. ஜஸ்ட் ஆர்வமில்லை என்றுதான் செல்லமாக மறுத்திருக்கிறார்.

அதன்படி பார்த்தால் அய்யா ஆனாலும் ஆவார். ஜூலை 2017-ல் நடக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பாஜக சாணக்கிய வியூகங்களை வகுத்து வகுகிறது. 18 எம்பிக்கள், 63 எம்எல்ஏக்களை வைத்திருக்கும் சிவசேனாவின் வாக்குகளும் பாஜகவிற்க தேவை. அதன்படி பார்த்தால் இந்த முடிவில் வேறு பாஜக தலைவர்கள் அல்லது கோஷ்டிகளுக்கு விருப்பம் இல்லை என்றாலும் மற்ற கோஷ்டிகள் சிவசேனா மூலம் பகவத்தை உள்ளே நுழைக்க முயற்சிக்கலாம்.
ஏற்கனவே இரண்டு குடியரசுத் தலைவர் தேர்தல்களில் பாஜகவிற்கு எரிச்சல் ஏற்படுத்தும் விதமாக எதிர் வேட்பாளர்களை ஆதரித்த அனுபவமும் சிவசேனாவிற்கு உண்டு. மேலும் தற்போதைய பிரனாப் முகர்ஜியை பாராட்டியிருக்கும் சிவசேனா ஆர்.எஸ்.எஸ் தலைவரை முன்மொழிவதில் கூட ஏதோ சதித்திட்டங்கள் இருக்கலாம்.
உழைக்கும் மக்களுக்கு எதிரான கருத்துக்களையும், செயல்பாடுகளையும் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் போன்ற பாசிச அமைப்புக்கள் தொலை நோக்காய் இத்தகைய அரசு பதவிகள் அதிகாரம் மூலமே தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும்.
ஏற்கனவே கல்வி, வரலாறு, திரைப்படம், பல்கலைக்கழகங்கள், சென்சார் போர்டு என்று பண்பாட்டு துறைகளில் ஆக்கிரமித்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் தற்போது கவர்னர்களை காவி மயமாக்கி இறுதியில் குடியரசுத் தலைவரையே கைப்பற்ற நினைக்கிறது. இப்பதவி வகிப்போர் கட்சி சார்பற்று, அரசியல் சட்டத்திற்கு கட்டுப்பட்டு மட்டும் நடப்பார்கள் போன்ற விளக்கங்களெல்லாம் இனி குப்பைக் கூடையில் கூட இருக்கும் தகுதியில்லை.
இனி என்ன? “இந்து ராஷ்ட்ரத்தை’ அறிவிப்பார்களோ?
மேலும் படிக்க :
  • RSS Chief Mohan Bhagwat For President? Good Idea, Says Shiv Sena

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக