என்டிடிவி
தொலைக்காட்சியின் நிறுவனர்களான பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய்
ஆகியோரின் வீடுகளில் சி.பி.ஐ. நடத்திய சோதனைக்குப் பதிலளிக்கும் வகையில்
என்டிடிவி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
சி.பி.ஐ. நடத்திய சோதனை பற்றி ஏற்கெனவே மின்னம்பலத்தில் பதிவிட்டிருந்தோம். இந்தச் சோதனை தொடர்பாக என்டிடிவி நிறுவனம் அளித்துள்ள விளக்கம் வருமாறு:
“ஆரம்பக்கட்ட விசாரணைகூட மேற்கொள்ளாமல், என்டிடிவி அலுவலகங்கள் மற்றும் நிறுவனர்களின் வீடுகளில் சி.பி.ஐ. மேற்கொண்ட சோதனை அதிர்ச்சியளிக்கிறது. இது ஊடகங்களின் சுதந்தரத்தின் மீதான அவதூறான அரசியல் தாக்குதல் ஆகும். விடுவிக்கப்பட்ட முன்னாள் என்டிடிவி ஆலோசகரான சஞ்சய் தத்தின் பொய்யான குற்றச்சாட்டுகளுடன் கூடிய புகாரின்பேரில், முதல் தகவல் அறிக்கை தயார் செய்ய சி.பி.ஐ. வற்புறுத்தப்பட்டுள்ளது. சஞ்சய் தத் பல பொய்யான குற்றச்சாட்டுகளுடன் நீதிமன்றங்களில் வழக்கு பதிவு செய்துள்ளார். ஆனால், ஒருமுறைகூட நீதிமன்றத்தில் இருந்து அவர் எந்த உத்தரவையும் பெறவில்லை.
இத்தனை வருடங்களாக நீதிமன்றங்களே உத்தரவு பிறப்பிக்க மறுத்துவந்த நிலையில், இத்தகைய குற்றச்சாட்டுகளின்பேரில் சி.பி.ஐ. சோதனை மேற்கொள்வது வியப்பளிப்பதாகச் சட்ட ஆலோசகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
பல வருடங்களுக்கு முன்பே பிரணாய் மற்றும் ராதிகா ராயால் அடைக்கப்பட்ட கடன் தொகைக்கு தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது (படத்தில் சான்று).
பல தொழிலதிபர்கள் கோடிக்கணக்கான பணத்தை திருப்பி செலுத்தாமல் இருந்துவந்தாலும் அவர்கள்மீது எந்த வழக்கும் இதுவரை சி.பி.ஐ. பதிவு செய்யவில்லை. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது மட்டுமல்லாமல், ஏற்கனவே ஐசிஐசிஐ வங்கிக்கு செலுத்தப்பட்ட கடன் தொகைக்காக, சோதனையிலும் ஈடுபட்டுள்ளது சி.பி.ஐ. ஐசிஐசிஐ வங்கி ஒரு தனியார் வங்கி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய செக்யூரிட்டி எக்ஸேஞ்ச் வாரியத்திடம் ஆவணங்கள் சமர்பிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. மேலும் இதற்காக சோதனை மேற்கொள்ளும் அதிகாரமும் சி.பி.ஐ-க்கு கிடையாது. இதையெல்லாம் வைத்துபார்க்கையில், சி.பி.ஐ. மேற்கொள்ளும் சோதனை, மறைமுகமான அரசியல் தாக்குதல் என்பது விளங்குகிறது.
என்டிடிவி-யின் நிறுவனர்கள், ஐசிஐசிஐ வங்கிக்கு முழு கடன் தொகையையும் செலுத்த தவறவில்லை. நாங்கள் இங்கு சுதந்தரமாகவும், ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம். என்டிடிவி-யின் சுதந்திரத்தையும், பயமின்மையையும் பொறுத்துகொள்ள முடியாத ஆட்சியாளர்கள், ஊடகங்களை ஒடுக்க எடுத்துள்ள முயற்சிதான் இந்த சி.பி.ஐ சோதனை.
அரசியல்வாதிகள் எங்களை எத்தனை முறை தாக்க முயன்றாலும், இந்தியாவின் ஊடகங்களுக்கான சுதந்தரத்துக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.” இவ்வாறு என்டிடிவி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. minnambalam

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக