மின்னம்பலம் :பல்கலைக்கழக
மானியங்கள் ஆணைக்குழு (UGC), தொழில்நுட்பக் கல்விக்கான அனைத்து இந்திய
கவுன்சில் (AICTE) ஆகிய இரண்டையும் மாற்றியமைத்து உயர்கல்விக்கான ஒரே
விதிமுறைகள் புதிதாக உருவாக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதிதாக அமைக்கப்படும் இந்தக் கல்வி விதிமுறைக்குத் தற்காலிகமாக உயர்கல்வி
அதிகாரமளித்தல் ஒழுங்குமுறை நிறுவனம் (HEERA) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இதற்காக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கல்வியாளர்கள், வல்லுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த முடிவு உயர்கல்வித்துறையில் சீரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு கூறுகிறது.
இதுகுறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்தப் புதிய சட்டம் உயர்கல்வித்துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்த உதவும். இந்தப் புதிய விதிமுறையை உருவாக்கும் பணியில் மனிதவள மேம்பாட்டுத்துறை மற்றும் நிதி ஆயோக் ஆகியவை ஈடுபட்டுள்ளன. இதற்கான விரிவான செயல்திட்டத்தை உருவாக்கும் பணியில் நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் மற்றும் மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் கே.கே.சர்மா ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.
புதிய சட்டத்தை உருவாக்கச் சிறிது காலங்கள் ஆகலாம். அதுவரையில் UGC மற்றும் AICTE நடைமுறையில் இருக்கும். மேலும் புதிய சட்டத்தில் UGC-யில் உள்ள விதிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக