ஞாயிறு, 25 ஜூன், 2017

அதிமுக வசூலில் 50 சதவீதம் பாஜகவுக்கு Chennai - Dehil Deal.. .. எடப்பாடி ஆட்சி இனி நிரந்தரம் ..துறைவாரியாக வசூலிக்கப்படும் கார்டன் நிதி இனி..

டெல்லி - எடப்பாடிக்கிடையே ஏற்படுத்திக்கொண்ட டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ்!ஒவ்வொரு துறை மூலமும்  வசூலிக்கப்படும்  மாமூல் தொகை  முன்பு  கார்டனுக்கு போனது .  இனி அவற்றில் 50 சதவீதம் டெல்லிக்கு போகும் மீதி  அதிமுக பொறுப்பாளர்களுக்கு போகும்
அதிமுக ஆட்சிக்கு பாஜக வேறு பிரச்சனைகள் கொடுக்காது
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு அளிக்கும் விஷயத்தில் கட்சியின் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு தன்னிச்சையாக எடப்பாடி செயல்படுவது குறித்து தமது ஆதரவு
எம்.எல்.ஏ.க்களுடன் விவாதித்தார் தினகரன். 22-ந் தேதி இரவிலும், 23-ந் தேதி பகலிலும் இந்த விவாதம் நடந்ததுஇரவில் நடந்த விவாதத்தில், எடப்பாடிக்கு இந்தளவுக்கு துணிச்சல் வந்தது எப்படி? என தினகரன் கேட்க, "டெல்லிக்கும் எடப்பாடிக்குமிடையே ஏற்படுத்திக்கொண்ட டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ்தான். இதில் டேர்ம்ஸ்ங்கிறது, எடப்பாடி தலைமையிலான ஆட்சிக்கும் அமைச்சர்களுக்கும் எந்த வகையிலும் சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள டெல்லி தந்துள்ள உத்தரவாதம்'' என சொல்லியிருக்கிறார்கள் எம்.எல்.ஏ.க்கள்."அப்படின்னா கண்டிஷன்ஸ்ங்கிறது?'' என தினகரன் கேட்க, "முன்பு ஒவ்வொரு துறை மூலம் திரட்டப்படும் பார்ட்டி ஃபண்ட் எடப்பாடி மூலமாக கார்டனில் ஒப்படைக்கப்பட்டது. அது, கடந்த 4, 5 மாதமாக கார்டனுக்குப் போகவில்லை. ஆங்காங்கே தேங்கிக் கிடக்கிறது. இனி, முன்பு போல திரட்டப்படும் மொத்த ஃபண்டில் 50 சதவிதம் டெல்லிக்கும் 50 சதவீதம் எடப்பாடி அ.தி.மு.க.வுக்கும் என உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டிருப்பதுதான். இவைதான் எடப்பாடிக்கு துணிச்சல் வரக்காரணம்'' என்கிறார்கள் தினகரனின் ஆதரவாளர்கள். நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக