ஞாயிறு, 25 ஜூன், 2017

உயர் சாதியினருக்கு மருத்துவ கல்வியில் 50.5 % இடஒதுக்கீடு.. இந்த ஆண்டு முதல் .. மத்திய அரசு அறிவிப்பு

thetimestamil : இந்திய அளவில் மருத்துவ கல்வி வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்படும் இடங்களை குறைத்து,  உயர் சாதியினருக்கு அதாவது பொது பிரிவினருக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக மத்திய சுகாதார செயலர் சி.கே. மிஸ்ரா தெரிவித்துள்ளார். நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில்,  49.5% இடஒதுக்கீடு பெரும் பிரிவினருக்கு தனியாகவும் 50.5 % இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கும் தனியாகவும் இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவ செயலர் தெரிவித்துள்ளார்.
மேலும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்த, அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களால் மட்டுமே 49.5 % இடஒதுக்கீட்டில் இடங்களைப் பெறமுடியும். சிபிஎஸ்இ நீட் தகவல் 2017 வெளியீட்டில் ‘க்ரீமி லேயர் விண்ணப்பதாரர்கள், ஓபிஸி பிரிவின் கீழ் வராதவர்கள்,  இட ஒதுக்கீடு பெறாத (Unreserved (UR) ) என்ற பிரிவை குறிக்கும்படி’ சொல்லப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு, ஓசி விண்ணப்பதாரர்கள் பெற்ற இந்திய அளவிலான ரேங்கை குறிப்பிட்டால் மட்டும் போதும். இந்த ஆண்டு, ரேங்குடன் சேர்த்து இட ஒதுக்கீடு பெறாத என்ற தகவலையும் சேர்த்து விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என தெரிவித்துள்ளது அந்த வெளியீடு.
உதாரணத்துக்கு, இந்த புதிய அறிவிப்பின் மூலம், இந்திய அளவில் 80,000வது ரேங்க் வாங்கிய ஓசி மாணவர், இட ஒதுக்கீடு பெறாத பிரிவின் கீழ் 40,000வது ரேங்க் பெற முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக