செவ்வாய், 20 ஜூன், 2017

ஜிஎஸ்டி மசோதா சட்டசபையில் நிறைவேறியது ! மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு

ஜூலை மாதம் 1ஆம் தேதி, இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக உள்ளது. இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று ஜிஎஸ்டி மசோதா தாக்கல்செய்யப்பட்டது. பின்னர் குரல் வாக்கெடுப்பின்மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் கடும் எதிர்ப்பையும் மீறி ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டது. ஜிஎஸ்டி மசோதாகுறித்து பேசிய மு.க.ஸ்டாலின், 'ஜிஎஸ்டி மசாதா மீதான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை, அதை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது. அனைத்துத் தரப்பினரின் கோரிக்கையை அடுத்துதான் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஆனால், தமிழக அரசு அப்படிச் செய்யவில்லை.
மேலும், மசோதாவை தற்போது நிறைவேற்றாமல் சட்டமன்றத்தின் தேர்வுக் குழுவுக்கு அனுப்பிவைக்க வேண்டும். அவர்களின் கருத்தை பெற்ற பிறகே, மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்' என்று பேசினார். ஆனால், அவர் எதிர்ப்பையும் மீறி மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தி.மு.க-வினர் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்தனர் விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக