வியாழன், 15 ஜூன், 2017

உருப்படியாக எதுவுமே செய்யாத அதிமுக...? திமுகவின் வரலாறை எடுத்து சொல்ல திமுகவில் ஆளே இல்லையா?

Babu Vmk: :விழித்துக்கொள்ளுமா திமுக... M. K. Stalin
ஒன்னுமே இல்லாத திட்டங்களை எல்லாம் பெரிதுபடுத்தி, அதையும் முழுதாக (அரைகுறையாக) நிறைவேற்றாமலேயே பெரிய சாதனையை நிகழ்த்திவிட்டதாக அதிமுகவால் மக்களை நம்பவைக்க முடிகிறதென்றால்....
திமுகவின் இத்தனை ஆண்டுகால மக்கள் நலத் திட்டங்களை மக்களிடம் ஏன் கொண்டு செல்ல முடியாது....????
1. சமூக நலத் திட்டங்கள்...
2. கல்வி வளர்ச்சி திட்டங்கள்...
3. மருத்துவ நலத் திட்டங்கள்
4. உள்கட்டமைப்பு வசதி திட்டங்கள்...
5. தொழில் வளர்ச்சி திட்டங்கள்....
6. பொருளாதார வளர்ச்சி திட்டங்கள்...
7. விவசாய நலத் திட்டங்கள்...
8. தமிழ்மொழி வளர்ச்சி திட்டங்கள்...
9. அரசு ஊழியர்கள் நலத் திட்டங்கள்...
10.மத்திய அரசில் பங்கு பெற்று திமுகவால் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட திட்டங்கள்...
என அனைத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்....
அனுபவமும் திறமையும்மிக்க....
1. திமுகவின் மூத்த தலைவர்கள்...
2.ஒய்வுபெற்ற கல்வியாளர்கள்...

3. ஒய்வுபெற்ற பொருளாதார வல்லுனர்கள்...
4. ஒய்வுபெற்ற IAS அதிகாரிகள்...
5. ஒய்வுபெற்ற IPS அதிகாரிகள்...
6. ஒய்வுபெற்ற நீதிபதிகள்....
ஆகியோர் அடங்கிய ஒரு மூத்தவர்கள் குழு திமுகவின் திட்டங்களை வகைப்படுத்தி நெறிப்படுத்தி மக்களுக்கு புரியும்வண்ணம் எளிமைபடித்தி தொகுக்க வேண்டும் ....
திமுகவின் மீது வைக்கப்பட்டுள்ள பொய் குற்றச்சாட்டுகளை மறுக்கும் வகையில் ஆதாரங்களுடன் தெளிவான விளக்கங்களுடன் மக்களுக்கு புரியும்வகையில் அறிக்கைகள் தயாரிக்கப்பட வேண்டும்...
அதிமுகவின் மக்கள் விரோதப்போக்கை, செயல்பாடற்ற அதிமுக அரசின் நிர்வாக சீர்கேட்டை , முடக்கிபோட்ட திமுகவின் திட்டங்களை எல்லாம் அறிக்கையாக தயாரிக்க வேண்டும்...
துடிப்பும் திறமையும்மிக்க...
1.திமுகவின் இளைய தலைவர்கள்...
2. கணினி தொழில்நுட்ப வல்லுநர்கள்...
3. ஊடகவியளாலர்கள்...
4.விளம்பர பட இயக்குனர்கள்..
5.பொருளாதார வல்லுநர்கள்...
6.மார்கெட்டிங் வல்லுநர்கள்...
ஆகியோர் கொண்ட ஒரு இளைஞர்கள் குழு , மூத்தவர்கள் குழுவால் வகைப்படுத்தப்பட்ட திட்டங்களையும் ,மறுப்பு அறிக்கைகளையும் எளிதில் மக்களை சென்றடையும் வகையில் SMS ,E-MAIL, RECORDED VOICE (நான் உங்கள் கலைஞர் பேசுகிறேன், உங்கள் ஸ்டாலின் பேசுகிறேன்),விளம்பரப் படங்கள்,குறும்படங்கள் (SHORT FILM), சமூக வளைதளங்கள், பெரிய ஸ்கிரீன் கொண்ட பிரச்சார வாகனங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மக்களை சென்றடையும் வகையில் கொண்டுசேர்க்க வேண்டும்...
மூத்த அறிஞர்கள் குழுவும் , இளைய தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவும் இணைந்து திறம்பட திமுகவின் தலைர்களுடன் பணியாற்றினால் தேர்தலை எளிதில் வெற்றிகொள்ளலாம்...!
ஊடகங்கள்தான் தற்போது ஆட்சியை அமைக்கின்றன..., ஊடகங்கள்தான் அரசசை வழிநடத்துகின்றன...ஊடகங்கள்தான் ஆட்சியை காப்பாற்றுகின்றன.... ஊடகங்கள்தான் திமுகவிற்கு எதிராக உண்மையை பொய்யாகவும்... பொய்யை உண்மையாகவும் திரித்து காட்டுகின்றன...
இப்படிப்பட்ட நிலையில் திமுக தனக்கான ஊடக பலத்தை(புதிய நடுநிலை திமுக சார்பு டி.வி சேனல்கள், திமுக சார்பு செய்திதாள்கள், வார பத்திரிக்கை,மாத பத்திரிக்கை) முதலில் அதிகரிக்க வேண்டும்...
தற்போதைக்கு கையில் இருக்கும் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியையாவது சரியாக கையாள வேண்டும்...
கலைஞர் செய்திகள் சேனலை முற்றிலும் நவீன முறையில் மாற்ற வேண்டும்...
அதிநவீன தொழில்நுட்பங்களுடன் உலக தரத்திற்கு சேனலை கட்டமைக்க வேண்டும்...
திறமையான முற்றிலும் புதிய முகங்களுடன் புதிய நிகழ்சிகளை மக்களை கவரும்வண்ணம் வழங்க வேண்டும்...
கலைஞர் செய்திகள் சேனலை இணையத்தில் இணைத்து சமூக வளைதலங்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்...
தினமும் திமுக அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்தும் வகையில் ஒரு தொகுப்பு நிகழ்சியை வழங்க வேண்டும்...
திமுகவின் முன்னாள் அமைச்சர்களை கொண்டு தினமும் ஓர் நேர்காணலை நடத்தி திமுக ஆட்சியில் தங்களின் துறையில் நடந்த மக்கள் நலத்திட்டங்களையும் அதன் பயன்பாடுகளையும் விளக்க வேண்டும்...
தற்போதைய ஆட்சியின் அவலங்களை தோலுரிக்கும் வகையில் விவாத நிகழ்ச்சிகளை நடுநிலையாளர்கள்,திமுக முன்னாள் அமைச்சர்கள், திமுக வழக்கறிஞர்கள் கொண்டு நடத்த வேண்டும்...
ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் என மாவட்டவாரியாக நடக்கும் பிரச்சனைகளை அந்தந்த மாவட்ட திமுகவின் தலைவர்களை கொண்டு விவாதிக்கும் ஒரு நிகழ்சியை வழங்க வேண்டும்...
ஊடகத்தின் பலத்தை திமுக நன்றாக உணர்ந்திருந்தும் ஏன் இப்படி அமைதியாக உள்ளது என தெரியவில்லை...
பின்குறிப்பு :- எல்லோருக்கும் முன்னோடியாக சினிமா ஊடகத்தை கட்சி வளர்ச்சிக்கு பயன்படுத்திய இயக்கம்தான் திமுக ....
(மீண்டும்... சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் வேலை😁😁😁) மீள் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக