திங்கள், 5 ஜூன், 2017

சசிகலா + தினகரன் கை ஓங்குகிறது? பாஜகவோடு மோதிப்பார்க்க முடிவு? பெங்களூருக்கு படையெடுக்கும் எம் எல் ஏக்கள் ...


ஜெயலலிதாவில் மறைவில் ஆரம்பித்து, அ.தி.மு.க-வில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. ஓ.பி.எஸ் போர்கொடி, சசிகலா சிறை, எடப்பாடி ஆட்சி, ஆர்.கே.நகர் வேட்பாளர் டி.டிவி தினகரன், டி.டி.வி தினகரன் கைது, கட்சியில் இருந்து தினகரன் விலகல் என்று திடீர் திருப்பங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ஜாமீனில் இருந்து வெளிவந்த தினகரன், "கட்சிப் பணியை தொடர்வேன். கட்சியை விட்டு என்னை யாரும் நீக்கவில்லை. என்னை நீக்குவதற்கு பொதுச் செயலாளருக்கு மட்டும்தான் அதிகாரம் உள்ளது" என்று கூறினார். தினகரனின் இந்தக் கருத்து, அ.தி.மு.க வட்டாரத்தில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. "சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தினரை ஒதுக்கி வைத்து விட்டு ஆட்சி செய்வோம்" என்ற சொன்ன அமைச்சர்களே இந்த விவகாரத்தில் வெவ்வேறு விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். "தினகரனை அமைச்சர்கள் சந்திக்க மாட்டோம்" என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
"தினகரன் கட்சிப் பணி தொடர்வது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் முடிவு எடுப்பார்" என்று அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி வேலுமணி தெரிவித்தனர். ஆனால், "கட்சிப் பணியை தொடர தினகரனுக்கு உரிமை உள்ளது" என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். இதற்கிடையே, சசிகலாவை சந்தித்தப் பிறகுதான் அடுத்தகட்ட முடிவு எடுப்பேன் என்று தினகரன் கூறியுள்ளார். இந்நிலையில், சிறையில் உள்ள சசிகலாவை சந்திப்பதற்காக எம்.எல்.ஏ-க்கள் தங்கதமிழ் செல்வன், கதிர்காமு, ஜக்கையன் ஆகியோர் பெங்களூரு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல வெற்றிவேல் உட்பட சில எம்.எல்.ஏ-க்கள் இன்று பெங்களூரு செல்ல உள்ளதாகவும் அ.தி.மு.க அம்மா அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, டி.டி.வி தினகரனும் சசிகலாவை இன்று சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.  tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக