திங்கள், 5 ஜூன், 2017

ராகுல் காந்தி: நாட்டை ஒற்றை கலாச்சாரத்துக்கு கொண்டுபோக ஆர் எஸ் எஸ் / பாஜக ... நிறைவேறாது!

சென்னை: ''தமிழகத்தில், பா.ஜ., ஆட்சி நடப்பது போல, மத்திய அரசு செயல்படுகிறது,'' என, அகில இந்திய காங்., துணைத்தலைவர், ராகுல் கூறினார். சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நேற்று அவர் அளித்த பேட்டி: பா.ஜ., அரசும், அக்கட்சியை இயக்கும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும், நாட்டை ஒற்றை கலாசாரத்திற்குள் கொண்டு வர முயற்சிக்கின்றன. 1,000 -2,000 ஆண்டுகளாக, பல்வேறு பழக்க, வழக்கங்களைக் கொண்டுள்ள இந்தியாவில், ஒற்றை கலாசாரத்தை திணிக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ.,வை எதிர்த்து, ஒன்று பட்ட யுத்தத்தை துவக்க, எதிர்க்கட்சியினர் தயாராகி விட்டனர். அதன் அடையாளம் தான், கருணாநிதியின் சட்டசபை பணி வைர விழா வில், பங்கேற்ற கூட்டம். ஒரே மேடையில், அனைத்து கட்சிகளும் கைகோர்த்துஉள்ளன. எனவே, பா.ஜ.,வின் எண்ணம் நிச்சயம்நிறை வேறாது. தமிழகத்தில், தங்களின் ஆட்சி நடப் பது போல, மத்திய அரசு செயல்படுகிறது.


தமிழக அரசை மிரட்டுவது மட்டுமின்றி, நாடு முழுவதும் தங்களை தவிர, வேறு கட்சிகள் இருக் கக்கூடாது என, பா.ஜ., நினைக்கிறது. எதிர்க் கட்சி கள், எதிர்ப்பு கள் கூடாது என, கருதுகிறது. அந்த எண்ணத்தை வீழ்த்தி, பா.ஜ.,வை ஆட்சியிலிருந்து அகற்ற, அனைத்து எதிர்க்கட்சிகளும் முனைப்புடன் களம் கண்டு வருகின்றன.

காஷ்மீர் பிரச்னையில், மத்திய அரசு தவறான அணுகு முறையை கையாண்டு வருகிறது. ஆறு மாதங்களுக்கு முன், காஷ்மீர் விவகாரம் குறித்து, அமைச்சர் அருண் ஜெட்லியிடம் பேசினேன். இருந் தும், அவர்களின் நிலைப்பாட்டில், எந்த மாற்றமும் இல்லை.
அவர்களின் முடிவுகள் தவறாக உள்ளன; இப்படியே சென்றால், ஒரு கட்டத்தில் காஷ்மீரே எரிந்து விடும். காஷ்மீர் இந்தியாவின் வலிமை மிக்க மாநிலம்; அரசு எடுக்கும் முடிவுகள், அதற்கு வலிமை சேர்ப்பதாக இருக்க வேண்டும். இவ்வாறு ராகுல் கூறினார்.
கருணாநிதியை சந்தித்தார்

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் நேற்று, தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் இளங்கோவன் ஆகியோருடன், சென்னை கோபாலபுரத்தில் உள்ள, கருணாநிதி வீட்டிற்கு சென்றார். அவரை, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், மகளிர் அணி மாநில செயலர் கனிமொழி ஆகியோர் வரவேற்றனர்.

கருணாநிதியை சந்தித்த ராகுல், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார்; உடல் நலம் குறித்தும் விசாரித்தார். பின், ராகுல் கூறியதாவது:

கருணாநிதியை சந்தித்து, பிறந்த நாள் வாழ்த்து கூறியதை எண்ணி பெருமைப்படு கிறேன். சோனியாவின் வாழ்த்து செய்தியையும், அவரிடம் தெரிவித்தேன். அவர் உடல் நலம் தேறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மீண்டும் அவர், 100 சதவீத உடல்ஆரோக்கியம் பெற வேண்டும். இவ்வாறு ராகுல் கூறினார்.  தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக