செவ்வாய், 13 ஜூன், 2017

திமுகவில் பி.டி ஆர். பி.தியாகராஜன் தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளராக ..

திமுகவில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''திமுக சட்ட திட்டத்தில் கட்சியின் துணை அமைப்புகள், சார்பு மன்றங்கள் குறித்த விதி 31 பிரிவு 19-ன்படி திமுகவின் கொள்கை, செயல்பாடுகளை காலத்துக்கு ஏற்ற வகையில் அனைத்துத் தரப்பு மக்களிடமும் விரைவாக கொண்டுச் செல்ல திமுக தகவல் தொழில்நுட்ப அணி என்ற துணை அமைப்பு தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. அதன் செயலாளராக பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்படுகிறார். மற்ற நிர்வாகிகள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்'' எனத் தெரிவித்துள்ளார். நீதிகட்சியின்  நிறுவனர் பி டி ராஜன் பேரனுக்கு எமது வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக