ஞாயிறு, 25 ஜூன், 2017

சசி தரூர் : இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல ... வெங்காய நாயுடுவுக்கு பதிலடி

இந்தி இல்லையேல் வளர்ச்சி இல்லை. இந்திதான் நமது தேசிய மொழி.
இந்தியை அறிந்துகொள்ளாமல் நம்மால் எதுவும் செய்ய முடியாது. அதேநேரம் நமது தாய்மொழியிலும் நாம் புலமை பெற்றிருத்தல் வேண்டும்’ என்று நேற்று ஜூன் 24ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பேசினார் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு. மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் ஒரு விழாவில் கலந்துகொண்டபோது இவ்வாறு பேசினார் வெங்கையா நாயுடு.
இந்நிலையில், வெங்கையா நாயுடுவுக்கு முதல் பதில் கேரளாவில் இருந்து வந்திருக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான சசி தரூர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெங்கையா நாயுடுவின் பேச்சுக்குப் பதிலடி கொடுத்திருக்கிறார்.

‘இந்தி மொழி நமது நாட்டின் தேசிய மொழி அல்ல. இந்தி நம் நாட்டில் பரவலாக பேசப்படுகிறது என்பதும் அதைக் கற்றால் பயன் உண்டு என்பதும் சரிதான். ஆனால், இந்தியை யார் மீதும் திணிக்கக் கூடாது. திணிக்கவும் முடியாது’ என்று பதில் கொடுத்திருக்கிறார் சசி தரூர். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக