புதன், 21 ஜூன், 2017

சவுதியில் குடும்பத்துடன் வசிப்பவர்களுக்கு வரி அதிகரிப்பு

ரியாத்: சவுதி அரேபியாவில் வசிக்கும் குடும்பத்துடன் வசிக்கும் வெளிநாட்டவருக்கு குடும்ப வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய வரிவிதிப்பு கொள்கை வரும் ஜூலை 1-ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரசின் இந்த நடவடிக்கையால் அங்கு குடும்பத்தினருடன் வசிக்கும் பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் குடும்பத்தை இந்தியாவுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளனர். மேலும் சவுதியில் பிற நாட்டவரைக் காட்டிலும் அங்கு சுமார்; 41 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். சவுதியில் வேலை பார்க்கும் வெளிநாட்டவர்கள், மாத வருமானம் 5,000 ரியால்  (இந்திய மதிப்பில் 86,000 ரூபாய்) வாங்கினால் மட்டுமே குடும்பத்தினருடன் வசிக்க அனுமதி வழங்கப்படும்.
இந்நிலையில் சவுதி அரசின் இந்த முடிவின்படி சவுதியில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் குடும்பத்தில் ஒரு நபருக்கு மாதம் 100 ரியால் (1,700 ரூபாய்) வரியாக வசூலிக்கப்படும். அதுமட்டுமன்றி 2020-க்குள் ஒரு நபருக்கான மாத வரி 400 ரியாலாக உயரும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் சவுதியில் வாழும் இந்தியர்கள் தங்கள் குடும்பத்தினரை இந்தியாவுக்கே திருப்பி அனுப்பி வருவதாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக