செவ்வாய், 13 ஜூன், 2017

மழை நீரில் பெரிய மீன்கள் விழுகிறதே ... மும்பையில் ..

Kalai Mathi Oneindia Tamil  :மும்பை: மும்பையில் மழையின் போது வீதிகளில் மேய்ந்த மீன்களை பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு பிடித்தனர். அந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மகாராஷ்டிராவில் வாட்டி வதைத்து வந்த வெயில் தற்போது விடைபெற்றுள்ளது. அவ்வப்போது திடீர் திடிரென மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மும்பையில் பரவலாக நல்ல மழை பெய்தது. மும்பை மற்றும் தானே, நவிமும்பை உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், தாராவி தோபிகாட் பகுதிகளில் உள்ள குடிசை வீடுகளிலும் மழைநீர் புகுந்தது. அப்போது மழைநீரில் மீன்கள் மேய்வதை பார்த்த அப்பகுதியினர் அதனை உற்சாகமாக பிடித்தனர். கந்திவிலி பகுதியில் தேஜாஸ் மேத்தா என்பவர் மழையின் போது பிடித்த மீனுடன் போஸ் கொடுத்து அந்த போட்டோவை தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ளார். அந்தப் போட்டோ தற்போது வைரலாக பரவியுள்ளது. கூடுதல் மகிழ்ச்சி மும்பையில் அப்படி ஒன்றும் பெரியளவு மழை பெய்யவில்லை என்று கூறும் அப்பகுதி மக்கள் இந்த மழைக்கே வீதிகளில் மீன்கள் மேய தொடங்கிவிட்டதாக கூறினர். வெளுத்த வெயிலுக்கு மழையே இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்று கூறிய மக்கள் இதனால் மீன்கள் கிடைத்தது கூடுதல் மகிழ்ச்சி என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக