ஞாயிறு, 18 ஜூன், 2017

ஜெ.,சொத்தை விற்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு

சென்னை;: சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக, கர்நாடக அரசுக்கு செலுத்த வேண்டிய, 12 கோடி ரூபாய் கட்டணத்தை, ஜெயலலிதாவின் சொத்துக்களை விற்று செலுத்தும்படி கோரிய மனு மீதான விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம், ஜூலை, 7க்கு தள்ளி வைத்துள்ளது.சென்னையை சேர்ந்த, குமரன் தாக்கல் செய்த மனு: மறைந்த முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடந்தது. தனி நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஜெயலலிதாவுக்கு, 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கர்நாடக அரசுக்கு ஏற்பட்ட செலவுக்காக, 12 கோடி ரூபாயை வழங்கும்படி உத்தரவிடப்பட்டது. இந்த தொகையை, அரசின் கஜானாவில் இருந்து செலுத்தக் கூடாது. எனவே, ஜெயலலிதாவின் சொத்துக்களை விற்று, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை, கர்நாடகா அரசுக்கு செலுத்த வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன், எம்.சுந்தர் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை, விசாரணைக்கு ஏற்பது தொடர்பாக, மனுதாரர் தரப்பு விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை, 7க்கு தள்ளி வைத்தது. தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக