ஜெயக்குமார்,
செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட 19 அமைச்சர்கள் தலைமைச்
செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை
சந்தித்தனர். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்கள், சசிகலா,
தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கும் முடிவில் மாற்றமில்லை என்று
தெரிவித்தனர்.>இதுதொடர்பாக பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவும், தினகரன் ஆதரவாளருமான வெற்றிவேல் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளிக்கையில்,.சசிகலா
இந்த கட்சியின் பொதுச்செயலாளர். தினகரன் எங்கள் கட்சியின்
துணைப்பொதுச்செயலாளர். இவர்களைப் பற்றி பேசுவதற்கு கட்சியில் யாருக்கும்
எந்த அருகதையும் இல்லை. இதனை மீண்டும் அவர்கள் தொடர்ந்து கொண்டிருந்தால்
விளைவுகள் விபரீதமாக இருக்கும்.">கூவத்தூரில்
122 எம்எல்ஏக்களை ஒருங்கிணைத்து எடப்பாடி பழனிச்சாமியை முதல்
அமைச்சராக்கி, ஜெயக்குமாருக்கு நிதி அமைச்சர் பொறுப்பை கூடுதலாக கொடுத்த
சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து யாரும் பார்க்கக் கூடாது என்று
சொல்வதற்கு ஜெயக்குமாருக்கு யோக்கியதை இல்லை.
;கேள்வி: ஜெயக்குமார் மட்டும் தனிப்பட்ட முறையில் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. அனைத்து அமைச்சர்களும் செய்தியாளர்களை சந்தித்து இந்த கருத்தை முன் வைத்திருக்கிறார்கள். மேலும் செய்தியாளர்கள் சந்திப்புக்கு முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசியிருக்கிறார்கள்.
;வெற்றிவேல்: கட்சியில் 10 அமைச்சர்கள் சேர்ந்து எடுக்கக் கூடிய முடிவை ஏற்க முடியாது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. முதல்வரை சந்தித்தப் பிறகு செய்தியாளர்களை சந்திப்பதாக கூறுவதை நான் நம்ப தயாரில்லை. எடப்பாடி பழனிச்சாமி சொல்லட்டும் யோசிக்கலாம்.
;கேள்வி : ஏப்ரல் 17ஆம் தேதி நாங்கள் தினகரனை ஒதுக்கி வைப்பதாக அறிவித்தோம். அதனை ஏற்று அவர் ஒதுங்கியிருப்பதாக பேட்டி அளித்தார். அந்த முடிவை தினகன் தொடர வேண்டும் என்று கூறியிருக்கிறார்களே.
வெற்றிவேல்: ஒதுங்கி இருப்பதாக அறிவித்தார். பின்னர் சிறை சென்று 42 நாள் கழித்து வெளியே வந்தார். இரு அணியும் இணைந்திருக்கும் என்று நினைத்தார். இரட்டை இலையை மீட்பதற்கான பணிகளை செய்திருப்பார்கள் என்று நினைத்தோம். செய்யவில்லை. தமிழ்நாடு முழுவதும் ஒன்றரை கோடி தொண்டர்கள் எடுக்க வேண்டிய முடிவை 10, 15 அமைச்சர்கள் எடுப்பதை ஏற்க முடியாது. இவ்வாறு கூறினார். நக்கீரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக