திங்கள், 5 ஜூன், 2017

சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க 19 அமைச்சர்கள் முடிவு!

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தவிர அமைச்சரவையில் உள்ள 29 அமைச்சர்களில் 19 பேர் இன்று தலைமைச் செயலகத்தில் தனியாக ஆலோசனை மேற்கொண்டனர். 19 அமைச்சர்களும் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்திப் பின்னர், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் உள்ளிட்டட அமைச்சர்கள், சசிகலா, தினகரன் குடும்பத்தினரை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. தினகரனை சார்ந்தவர்களை நம்பி அதிமுக அரசு இல்லை. தினகரனுடன் எந்த தொடர்பும் இல்லை. தினகரனை கட்சியில் உள்ள யாரும் சந்திக்க மாட்டார்கள். சசிகலா, தினகரன் சார்ந்தவர்களை ஒதுக்கி நல்லாட்சி நடக்கிறது. கட்சியில் இருந்து தினகரன் ஒதுங்கி இருக்க வேண்டும்.
யாருடைய பின்னணியும் இல்லாமல் ஜெயலலிதா அரசை வழி நடத்துகிறோம் என்றார்.

;முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தவிர அமைச்சரவையில் உள்ள 29 அமைச்சர்களில் 19 பேர் இன்று தலைமைச் செயலகத்தில் தனியாக ஆலோசனை மேற்கொண்டனர். 19 அமைச்சர்களும் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்திப் பின்னர், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் உள்ளிட்டட அமைச்சர்கள், சசிகலா, தினகரன் குடும்பத்தினரை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. தினகரனை சார்ந்தவர்களை நம்பி அதிமுக அரசு இல்லை. தினகரனுடன் எந்த தொடர்பும் இல்லை. தினகரனை கட்சியில் உள்ள யாரும் சந்திக்க மாட்டார்கள். சசிகலா, தினகரன் சார்ந்தவர்களை ஒதுக்கி நல்லாட்சி நடக்கிறது. கட்சியில் இருந்து தினகரன் ஒதுங்கி இருக்க வேண்டும். யாருடைய பின்னணியும் இல்லாமல் ஜெயலலிதா அரசை வழி நடத்துகிறோம் என்றார்.  நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக