ஞாயிறு, 18 ஜூன், 2017

தேங்காய் வியாபாரம் செய்யும் முன்னாள் திமுக எம் எல் ஏ.பொன்னுசாமி

தமிழகத்தில் விவசாயத்தை பூர்வீகமாக கொண்ட எம்.பி., எம்.எல்.ஏக்கள் எவ்வளவு சம்பாதித்தாலும், விவசாயத்தின் மீதும் அவர்களுக்கு பற்று இருக்கும். இப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் நாமக்கல் மாவட்டம் சேத்தமங்கலத்தைச் சேர்ந்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ பொன்னுச்சாமி. 2006 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற அவர், அதற்கு பிறகு 2 முறை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தார். இதனால் தற்போது விவசாயத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தோட்ட வேலை செய்கிறார். அவரது நிலத்தில் விளைந்த பழங்களை விற்பனை செய்ய கடையும் நடத்தி வருகிறார். மற்ற விவசாயிகளிடம் இருந்தும் பழங்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார்.லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக