வியாழன், 22 ஜூன், 2017

மீராகுமார் குடியரசு தலைவர் வேட்பாளர் ... சோனியா அறிவிப்பு



மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்  பாபு ஜெகஜீவன்ராமின் புதல்வி
மீராகுமார் எதிர்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டு உள்ளார் . காங்கிரஸ்,இடதுசாரிகள் , மற்றும் திமுக உட்பட்ட எதிர்கட்சிகளின் கூட்டணி இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது . இவர் மக்களவையில் சபாநாயகராக திறமையாக பணி ஆற்றியவர்.  தலித் சமூகத்தின் மிகவும் பிரபலமான மக்கள் ஆதரவு பெற்ற தலைவராகும் .  ஜனாதிபதி தேர்தலில் மீராகுமாரை ஆதரிக்க கட்சிகளுக்கு சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மீரா குமார் அவர்களை பொது வேட்பாளராக எதிர்க்கட்சிகள் அறிவித்தது. அவரை ஆதரிக்குமாறு அனைத்து கட்சிகளுக்கும் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக