செவ்வாய், 27 ஜூன், 2017

அமைச்சர் நிலோபர் கபீலால் அச்சுறுத்தலிற்கு உள்ளாகும் அஸ்லாம் பாஷா


அஸ்லாம் பாஷா தமிம்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மைப் பிரிவின் தலைவர் மற்றும் உயர்நீதி மன்ற வழக்கறிஞர். நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் மீது ஆளும் பாரதிய ஜனதா அரசு வெறுப்பினை தூண்டி விட்டுள்ளது. இந்த வெறுப்புணர்வினால் இஸ்லாமியர்கள் பல்வேறு வன்முறைக் கும்பல்களால் தொடர் தாக்குதலிற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த வன்முறைக் கும்பல்களுக்கு ஆளும் மோடி அரசு மற்றும் ஆளுங்கட்சியான பாரதியஜனதாவின் மறைமுக ஆசியும் இருப்பதால் வன்முறைக் கும்பல்கள் உற்சாகம் அடைந்திருப்பதுடன் வன்முறையும் அதிகரித்து வருகின்றது.
இந்த வன்முறைகளுக்கு எதிராக தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களின் ஒரே குரலாக இருப்பது தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் அஸ்லாம் பாஷா தான். அஸ்லாம் பாஷா நேற்று ஏன் அதிமுக அமைச்சர் நிலோபர் கபீல் இந்த விசயத்தில் மவுனமாக இருக்கின்றார் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.


இதனை அடுத்து அமைச்சரின் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்தனர். இன்றைக்கு அதிமுக யார் கட்டுப்பாட்டில் இயங்குகின்றது என்று தெரியாத சூழ்நிலையில் அமைச்சர்கள் தங்களுக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாக நினைத்துக் கொண்டு அரசியல் அரங்கில் கேட்கப்படும் கேள்விகளை வன்முறை மூலம் அடக்க நினைக்கின்றனர். இதற்காக அவர்கள் தங்கள் ஆதரவாளர்களையும் தூண்டி விடுகின்றனர். இப்படி தூண்டி விடப்பட்ட நிலோபர் கபீலின் ஆதரவாளர்கள் அஸ்லாம் பாஷாவிற்கு தொலைபேசியில்  கொலை மிரட்டல் விடுத்தனர்.
                 அஸ்லாம் பாஷா  ரம்ஜான் நாளை முன்னிட்டு செய்தியாளர்களுக்கு அளித்த அந்த பேட்டியில்  மாட்டு  இறைச்சி சட்டம் குறித்து விமர்சித்தாகவும் அதில் அதிமுகவை சேர்ந்த வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினரும் தொழிலாளர் நலத்துறையின் அமைச்சருமான நீலோபர் கபிலை  எப்படி என்ன நடந்தாலும் சரி பதவிதான் முக்கியம் என்று நினைக்கும் அமைச்சர் நிலோபர் கபில் எப்படி  மாட்டுக்கறி தடைக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானத்தை கொண்டு வர திராணி இல்லாத ஒரு அரசு அதை ஆதரிக்க கூடிய இந்த வாணியம்பாடி மண்ணை சேர்ந்த ஒரு அமைச்சர். மீண்டும் ஓட்டு கேட்டு மக்களிடத்தில் தான் செல்ல வேண்டும் என்றுகூட நினைப்பில்லாமல் கட்சியுடன் சேர்ந்து தமிழகத்தில் நீங்களும் இந்துத்துவ கொள்கையை விதைக்க உதவுகிறீர்கள் என்பதை மறந்து விடவேண்டாம். நாளை ஒரு வேலை இந்துத்துவ சக்திகள் ஆட்சிபீடத்தில் அமர்ந்தால் முதலில் தூக்கி எறிவது இந்த வாணியம்பாடி மண்ணில் பிறந்த அமைச்சரைதான் என்பதை மறக்க கூடாது என்று பேட்டியளித்திருந்தார்.
இதில் ஆத்திரமடைந்த அமைச்சரின் ஆதரவாளர்கள் அஸ்லம்பாஷாவை செல்போன் மூலம் கொலை செய்வதாகவும் குடும்பத்தினர் அனைவரையும் கொலை செய்வதாகவும் மிரட்டியதுடன் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியை திரும்ப பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மிரட்டினார்கள்.  இதனால் அஸ்லம்பாஷா வாணியம்பாடி காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்ற போது அமைச்சரின் ஆதரவாளர்கள் வழிமடக்கி தாக்க முயன்றனர்.  அங்கிருந்து அவர் தப்பி வாணியம்பாடி நகர காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
நேற்று இரவு மா்ம நபா்களால் அஸ்லாம் பாஷா வீட்டு முன்னால் வைக்கப்பட்டிருந்த அவருடைய  பெயா் பலகையை மர்ம நபர்கள்  சேதப்படுத்தியதுடன்,  ரம்ஜானுக்காக வைக்கப்பட்ட வாழ்த்து பேனரையும் கிழித்துள்ளனர். அதிமுக அரசின் காவல்துறை அலட்சியப் போக்கிற்கு பெயர் பெற்றது. ஒரு உயர் நீதி மன்ற வழக்கறிஞரின் புகாரைப் பெற்றும் அலட்சியப் போக்குடன் காவல்துறை நடந்து கொண்டுள்ளது.   visil.in/2017/06/nilofer-kafeel-threatens-aslam-bhasa/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக