செவ்வாய், 27 ஜூன், 2017

Big Boss கமல் .. சசிகலாவின் கூவத்தூர் ரியாலிடி ஷோவை காப்பி அடித்தார் ... அது டாப்பு இது டூப்பு!

பரிதாபத்திற்குரிய வெளிநாட்டு வாழ் தொழிலாளர்கள் ஒவ்வொருவனும் " பிக் பாஸ்" தான்
Stanley Rajan: பிக்பாஸ் நிகழ்ச்சி இப்பொழுதுதான்
இங்கு தெரிகின்றது,
ஏதோ சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லபோகும் விண்வெளி வீரர்களை , 6 மாதம் அங்கு பூமியினை பிரிந்து , தொடர்பற்று அந்தரத்தில் வசிக்க போகும் அவர்களை வழியனுப்புவது போல வழியனுப்புகின்றார்கள்< குடும்பத்தை பிரிந்து சென்று 100 நாள் தனியாக வாழவேண்டுமாம், அவர்களே சமைத்து உண்ண வேண்டுமாம், இது போட்டியாயாம். சர்வதேச விண்வெளி வீரர்களை விடுங்கள், அவர்கள் தைரியமும் பரிதாபமும் கஷ்டமும் வேறு, உலகை பிரிந்து அந்தரத்தில் தொங்கும் அவர்கள் புவிஈர்ப்பு விசையினை கூட எதித்து போராரவேண்டும் அவர்கள் "பிக் தெய்வங்கள்" எனும் வகையறாக்கள், அசாத்திய மன திடம் அதற்கு வேண்டும், உடல் நலமில்லை என்றால் கூட அவர்கள் திரும்ப முடியாது. அவர்கள் தான் மிக பெரும் சவாலை எதிர்கொள்பவர்கள்.. இந்த டிவி இம்சை பிக்பாஸ் எல்லாம் சும்மா, 15 பேரை ஒரே வீட்டில் வைப்பார்களாம் , அவர்களில் யார் மிகுந்த சகிபுதன்மையுடன் இருப்பார்களோ அவர்கள் பிக் பாஸாம்

இது பெரும் நிகழ்ச்சி என்றால், வறுமையோ வேறு பிரச்சினைகளோ விரட்ட , உலகின் எங்கோ மூலைக்கு ஓடி, எல்லா நாட்டு மக்களையும் பார்த்து, அவர்களை சகித்துகொண்டு, அவர்கள் மொழிகளை, கலாச்சாரத்தை படித்துகொண்டு, அவர்கள் உணவினை சகித்துகொண்டு, எல்லா சிக்கலையும் தாங்கி 100 நாள் அல்ல, 10 வருடம் வெளிநாடுகளில் அனாதையாக கிடக்கும் அவர்களுக்கு எப்படி இருக்கும்?
சகல பாதுகாப்போடு 15 பேரோடு ஏசி அறையில், நல்ல உணவோடும், பணத்தோடும் , நல்ல மேக் அப்போடும் மண்ணில் சகித்து கொள்ள என இருக்கின்றது? இதில் ஏது சகிப்பு தன்மை?
இனம்புரியா தேசத்தில், மனம்புரியா சோகத்தோடு முன்பின் தெரியா அந்நிய நாட்டவரை சகித்துகொண்டு செல்வதுதான் சகிப்பு தன்மை, கொடுமை, திரில் எல்லாம்
அந்த பரிதாபத்திற்குரிய வெளிநாட்டு வாழ் தொழிலாளர்கள் ஒவ்வொருவனும் "பிக் பாஸ்" தான்
பிக்பாஸ் நிகழ்ச்சி இப்பொழுதுதான் இங்கு தெரிகின்றது,
ஏதோ சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லபோகும் விண்வெளி வீரர்களை , 6 மாதம் அங்கு பூமியினை பிரிந்து , தொடர்பற்று அந்தரத்தில் வசிக்க போகும் அவர்களை வழியனுப்புவது போல வழியனுப்புகின்றார்கள்
குடும்பத்தை பிரிந்து சென்று 100 நாள் தனியாக வாழவேண்டுமாம், அவர்களே சமைத்து உண்ண வேண்டுமாம், இது போட்டியாயாம்
சர்வதேச விண்வெளி வீரர்களை விடுங்கள், அவர்கள் தைரியமும் பரிதாபமும் கஷ்டமும் வேறு, உலகை பிரிந்து அந்தரத்தில் தொங்கும் அவர்கள் புவிஈர்ப்பு விசையினை கூட எதித்து போராரவேண்டும்
அவர்கள் "பிக் தெய்வங்கள்" எனும் வகையறாக்கள், அசாத்திய மன திடம் அதற்கு வேண்டும், உடல் நலமில்லை என்றால் கூட அவர்கள் திரும்ப முடியாது
அவர்கள் தான் மிக பெரும் சவாலை எதிர்கொள்பவர்கள்..
இந்த டிவி இம்சை பிக்பாஸ் எல்லாம் சும்மா, 15 பேரை ஒரே வீட்டில் வைப்பார்களாம் , அவர்களில் யார் மிகுந்த சகிபுதன்மையுடன் இருப்பார்களோ அவர்கள் பிக் பாஸாம்
இது பெரும் நிகழ்ச்சி என்றால், வறுமையோ வேறு பிரச்சினைகளோ விரட்ட , உலகின் எங்கோ மூலைக்கு ஓடி, எல்லா நாட்டு மக்களையும் பார்த்து, அவர்களை சகித்துகொண்டு, அவர்கள் மொழிகளை, கலாச்சாரத்தை படித்துகொண்டு,
அவர்கள் உணவினை சகித்துகொண்டு, எல்லா சிக்கலையும் தாங்கி மனதில் வலியுடனும், வெளியில் புன்னகையுடனும், இரவில் தலைசாய்க்கையில் தலையணை நனைக்கும் கண்ணீருடனும், 100 நாள் அல்ல, 10 வருடம் வெளிநாடுகளில் அனாதையாக கிடக்கும் அவர்களுக்கு எப்படி இருக்கும்?
சகல பாதுகாப்போடு 15 பேரோடு ஏசி அறையில், நல்ல உணவோடும், பணத்தோடும் , நல்ல மேக் அப்போடும் மண்ணில் சகித்து கொள்ள என இருக்கின்றது? இதில் ஏது சகிப்பு தன்மை?
இனம்புரியா தேசத்தில், மனம்புரியா சோகத்தோடு முன்பின் தெரியா அந்நிய நாட்டவரை சகித்துகொண்டு செல்வதுதான் சகிப்பு தன்மை, கொடுமை, திரில் எல்லாம்
அந்த பரிதாபத்திற்குரிய வெளிநாட்டு வாழ் தொழிலாளர்கள் ஒவ்வொருவனும் "பிக் பாஸ்" தான்
உண்மையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பொருத்தமானவர்கள் யார்?
தமிழிசை. எச்.ராசா உட்பட்ட பாஜக பிரமுகர்கள், அதிமுக இம்சைகள், சீமான், இன்னும் சில அல்ட்ராசிட்டிகளை , அடிக்கடி அறிக்கை இம்சை செய்பவர்களை, சில சாதிய வெறியரிர்களை, மத வெறியர்களை, கிருஷ்ண்சாமி போன்ற அரைகுறைகளை, பெரியாரே ஆச்சரியபடும் பெரியாரிஸ்டுகள்.. எல்லாம் இந்த 100 நாள் திட்டத்தில் உள்ளே வைத்தால் நல்லது
தமிழகம் 100 நாளாவது அமைதியாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக