ஞாயிறு, 11 ஜூன், 2017

சென்னை சில்க்ஸ் இடிப்பு பணி: ஒருவர் பலி!

சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்பு பணி: ஒருவர் பலி!
சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்பு பணியின்போது இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபலமான தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் கடந்த மே-31 ஆம் தேதி அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. வெயில் காலம் என்பதால் அதிக ஏசி பயன்பாட்டின் காரணமாக மின் கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இங்கிருந்து ஊழியர்கள் அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டனர். தீயை அணைக்க 60 தீயணைப்பு வாகனங்கள் வரழைக்கப்பட்டன. மேலும் 400-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். மிகவும் சிரமப்பட்டு இரண்டு நாள்கள் வரை போராடி ஒரு வழியாகத் தீ அணைக்கப்பட்டது.

இதையடுத்து முழுவதுமாக சேதமடைந்த கட்டடத்தை இடிக்க, அரசு உத்தரவிட்டதையடுத்து, கட்டடத்தை இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று(ஜூன் 10) மதியம் ஜா கட்டர் இயந்திரம் மூலம் கட்டடம் இடிக்கும் பணி நடந்தது. அப்போது ஜா கட்டர் இயந்திரத்தின் டிரைவர் சரத் மற்றும் இன்னொருவர் மீதும் கட்டட இடிபாடுகள் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில், சரத் என்பவர் உயிரிழந்துவிட்டார். மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால், கட்டட இடிப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலயறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துணை ஆணையர் சரவணன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். minnambalam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக