ஞாயிறு, 25 ஜூன், 2017

வங்கி லாக்கர்களில் உள்ள பொருட்கள் களவு போனால் இனி வங்கிகள் பொறுப்பில்லை .. இன்று அறிவிப்பு

stanley.rajan. "இந்திய வங்கிகள் பாதுகாப்பனது அல்ல, இன்று பொருட்களுக்கு நாங்கள் பொறுப்பில்லை என்போம், நாளை மக்களின் டெப்பாசிட் பணத்திற்கே பொறுப்பில்லை என்போம் அதனால் மக்கள் வெளிநாட்டு வங்கிகளை நாடலாம்" என சொல்லாமல் சொல்கின்றது ரிசர்வ் வங்கி.
மொத்த இந்திய மக்களையும் வெளிநாட்டு வங்கிகள் பக்கமும் தனியார் செக்கியூரிட்டிகள் பக்கமும் திருப்பும் காரியம் இது.
ஆக இந்திய மக்களின் பொருட்களுக்கு இந்திய வங்கியிலே பாதுகாப்பு இல்லையாம், இந்த கொடுமையினை எங்கு போய் சொல்வது? விரைவில் சுவிஸ் வங்கி இந்தியாவில் கிளை திறந்து, நாங்கள் உங்களுக்கும் உங்கள் பணத்திற்கும் பாதுகாப்பானவர்கள் என சொல்லும் நிலை நிச்சயம் வரும்.
சுவிட்சர்லாந்து சென்று வங்கிகணக்கில் டெப்பாசிட் செய்வதை விட, சுவிஸ் வங்கியினையே இங்கு வரவழைத்தால் அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு எளிது? அதன் முதல்படிதான் இப்பொழுது நடக்கின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக