ஞாயிறு, 18 ஜூன், 2017

ஸ்டாலின் :எடப்பாடி மீது கிரிமினல் வழக்குப் பதிய வேண்டும் ஆர் கே நகர் இடைதேர்தர்ல் லஞ்சம் ...

ஆர்.கே.நகர் வேட்பாளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஆர்.கே.நகரில் நடைபெற இருந்த தேர்தலில் அதிமுக இரு அணிகளும் ஊழல் செய்த பணத்தை வாரி இறைத்தது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் குழுக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியே கேப்டனாகவும், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இது தெரியவந்ததாகவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாதது கண்டனத்துக்குரியது. தேர்தல் ஆணைய பரிந்துரையை ஏற்று இந்திய தண்டனை சட்டப்பிரிவின் கீழ் கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை நிறைவேற்றத் தவறினால், உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக