சனி, 3 ஜூன், 2017

ஹரியான .. ஆண்டுக்கு 35000 பெண்சிசுக்கள் இனக்கொலை ... மாட்டு பயங்கரவாதம் .. பாஜகவின் கோர முகம் ..

ஆயிரம் ஆண்களுக்கு வெறும் 877 பெண்களே கொண்ட ஹரியானா மாநிலத்தில், ஆண்டொன்றுக்கு சுமார் 35,000 பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுகின்றனர். நாட்டின் மொத்த குழந்தைப் பிறப்பில் 2.2 சதவீதம் ஹரியானா பங்களிக்கிறது – ஆனால், பிறப்பதில் நான்கு சதவீத பெண்குழந்தைகளைக் கொன்று விடுகின்றது. 1947-க்கு பிந்தைய புள்ளி விவரங்களை மொத்தமாக தொகுத்துப் பார்த்தால், பெண்களின் மேல் ஒரு இனப் படுகொலையையே ஏவிவிட்டுள்ளது ஹரியானா என்கிற ஒரே ஒரு மாநிலம்.
ஹரியானாவைச் சேர்ந்த மாட்டு பயங்கரவாதிகள் (கௌரக்ஷக்) மீண்டும் கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். தில்லியைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு இளங்கலை மாணவர் சிவம் என்பவரை கௌரக்ஷக் தள் என்கிற கும்பலைச் சேர்ந்த மாட்டு பயங்கரவாதிகள் பலமுறை கத்தியால் குத்தி மரண காயங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவர் சிவம் தில்லி அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
மாணவர் சிவம் செய்த ‘குற்றம்’ என்ன?

சமீபத்தில் மத்திய அரசு மாட்டுச் சந்தைகளுக்காக சில நெறிமுறைகளை வகுத்தளித்தது. மாட்டுக்கு கக்கூஸ் கட்ட வேண்டும், முக்கணாங்கயிறு கட்டக்கூடாது, கொம்புக்கு சாயம் பூசக்கூடாது உள்ளிட்ட கேலிக்கூத்தான விதிமுறைகளுக்கு இடையே இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தடைகளை ஏற்படுத்தியிருந்தது. மக்களின் உணவு உரிமையில் தலையிடும் இந்தப் பார்ப்பன சதிக்கெதிராக பரவலாக மக்கள் கொதித்தெழுந்தனர் – குறிப்பாக தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்களில் இந்த நெறிமுறைகளுக்கு எதிராக மாட்டுக்கறித் திருவிழாக்கள் நடத்தப்பட்டன.
இங்குள்ள இந்துத்துவ கும்பலின் தளகர்த்தர்களான ஹெச்.ராஜா, தமிழிசை போன்ற கோமாளிகளால் மாட்டிறைச்சித் திருவிழாவையோ, மக்கள் மாட்டிறைச்சி உண்பதையோ தடுக்கமுடியவில்லை. ஆனால், தெற்கே ”அசுரர்களின் பூமியிலிருந்து”’ கிளம்பிய கோமாதா பிரியாணி வாசனையை முகர்ந்த வடநாட்டுக் காவிக் குரங்குகளுக்கு வெறியேறியது. அதிலும், மாட்டைத் தொட்டதற்கெல்லாம் மரண தண்டனை வழங்கும் ஹரியானாவைச் சேர்ந்த காவிப் பண்டாரங்களோ ஆசனவாயில் மிளகாய்ப் பொடியை அப்பிக் கொண்ட பைத்தியக்காரக் குரங்கின் நிலைக்கு ஆளானார்கள்.
இந்நிலையில், ”கௌ ரக்‌ஷக் தள்” அதாவது பசுப் பாதுகாப்புப் படை என்கிற ஆர்.எஸ்.எஸ் பரிவார கூட்டம் ஒன்று ஹரியானா மாநிலத்தில் தமிழகம் மற்றும் கேரளாவில் நடந்த மாட்டுக்கறித் திருவிழாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை அறிவித்திருந்தது. இந்த கேலிக்கூத்தை எல்லாம் செய்தியாக்க வேண்டிய தலையெழுத்து உள்ளூர் பத்திரிகையாளர்களுக்கு இருக்கிறதல்லவா? அதற்காக போராட்டத்தைக் காணச் சென்ற பத்திரிகையாளர் ஒருவரோடு வேடிக்கை பார்க்க சென்ற நண்பர் தான் மாணவர் சிவம்.
நிற்க.
மாணவர் சிவனுக்கு நேர்ந்த கொடூரத்தைப் பற்றிய செய்திக்குள் செல்லும் முன் இந்துத்துவ வெறித்தனத்தைப் பற்றி கொஞ்சமாவது அறிந்து கொள்வது அவசியம். மலத்தொட்டிக்குள் இருக்கும் மொத்த நாற்றத்தையும் முகர்ந்து பார்க்கும் கொடுமைக்கு உங்களை ஆளாக்க நாங்கள் விரும்பவில்லை; அதற்கு மாறாக ஒரு சோறு பதமான ஹரியானாவைப் பற்றி மேலோட்டமாக அறிந்து கொள்ளுங்கள்.
ஆயிரம் ஆண்களுக்கு வெறும் 877 பெண்களே கொண்ட ஹரியானா மாநிலத்தில், ஆண்டொன்றுக்கு சுமார் 35,000 பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுகின்றனர். நாட்டின் மொத்த குழந்தைப் பிறப்பில் 2.2 சதவீதம் ஹரியானா பங்களிக்கிறது – ஆனால், பிறப்பதில் நான்கு சதவீத பெண்குழந்தைகளைக் கொன்று விடுகின்றது. 1947-க்கு பிந்தைய புள்ளி விவரங்களை மொத்தமாக தொகுத்துப் பார்த்தால், பெண்களின் மேல் ஒரு இனப் படுகொலையையே ஏவிவிட்டுள்ளது ஹரியானா என்கிற ஒரே ஒரு மாநிலம்.
பார்ப்பனிய இந்துத்துவ கலாச்சாரத்தின் புகுந்த வீடு குஜராத் என்றாலும், அது பிறந்தது ’வேத நாகரீகத்தின்’ தொட்டிலான கங்கைக் கரையோர மாநிலங்களில் தான். பொதுவில் இந்துத்துவ பார்ப்பனியம் மனிதகுலத்துக்கும், இயற்கை நியதிக்கும், அறிவுக்கும், அறிவியலுக்கும் எதிரானது என்று சொன்னாலும், குறிப்பாக அதன் ஆணாதிக்க கண்ணோட்டம் பெண்களுக்கும், மதவெறிக் கண்ணோட்டம் முசுலீம், கிருஸ்தவ மக்களுக்கும், சாதியக் கண்ணோட்டம் ஒடுக்கப்பட்ட ‘இந்து’ மக்களுக்குமே எதிரானது என்பதன் துலக்கமான உதாரணம் ஹரியானா.
இந்தப் பின்புலத்தில் சிவனின் கதைக்கு மீண்டும் வருவோம். தனது பத்திரிகையாளர் நண்பருடன் போராட்டத்தை வேடிக்கை பார்க்க கூட்டத்துக்குச் சென்ற சிவன், நண்பரது புகைப்படக் கருவியை வாங்கி வைத்திருந்திருக்கிறார். போராட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில் தனது கையிலிருந்த புகைப்படக் கருவியை நோண்டிக் கொண்டிருந்திருக்கிறார் சிவன். கையில் புகைப்படக் கருவியுடன் ஒருவன் தங்களது பராக்கிரமங்களைப் படமெடுக்காமல் அதை நோண்டிக் கொண்டிருப்பதைப் பார்த்த காவி கும்பல் வெறியேறிய நிலையில் “ஏன் தங்களைப் படமெடுக்கவில்லை?” என்று கேட்டு மிரட்டியதுடன், படமெடுக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளது.
தான் ஒரு மாணவரென்பதையும், தனக்குப் புகைப்படக் கருவியை இயக்கத் தெரியாது என்பதையும் சிவன் விளக்கிப் பார்த்துள்ளார் – ஆனால், பார்ப்பன போதை தலைக்கேறிய மாட்டுத் தீவிரவாதிகள் அதை நம்பாமல் தாக்க முயற்சித்துள்ளனர். அருகில் இருந்த பொதுமக்கள் சிலர் தலையிட்டு மாட்டு மூளை இந்துத்துவ கும்பல் “கொம்பில் பால்கறக்க முயற்சிக்கும்” கோமாளித்தனத்தை எடுத்துச் சொல்லி சிவனை தற்காலிகமாக காப்பாற்றியுள்ளனர்.
போராட்டம் முடிந்து சிவன் திரும்பிச் செல்லும் வழியில் மோகித் எனும் மாட்டுப் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவன் தனது கூட்டாளிகளுடன் அவரைப் பின் தொடர்ந்துள்ளான். அருகில் உள்ள சந்தைப் பகுதியில் வைத்து சிவனை வழி மறித்த இந்த கும்பல், அவரைக் கத்தியால் சராமாரியாக குத்தி விட்டுத் தப்பியோடி உள்ளது. மக்களில் சிலர் உயிருக்குப் போராடிய சிவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கத்திக் குத்தில் ஏற்பட்ட காயங்கள் அபாயகரமாக இருந்ததால் அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் கையை விரித்து விடவே, தற்போது தில்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிருக்குப் போராடி வருகிறார் சிவன். சம்பவத்துக்குப் பின் மோகித்தை மட்டும் கைது செய்துள்ள் ஹரியானா மாநில போலீசார், மோகித்தின் கூட்டாளிகளும் மாட்டுப் பாதுகாப்புப் படையின் உறுப்பினர்களுமான மற்ற தீவிரவாதிகளைத் ‘தேடி வருவதாக’ அறிவித்துள்ளது.
இச்சம்பவத்தை எங்கோ நடந்ததெனக் கடந்து செல்ல முடியாது; இதில் தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்களுக்கு நேரடியான செய்தி ஒன்று உள்ளது – குறிப்பாக செய்தித் தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்களுக்கு.
தமிழக செய்தித் தொலைகாட்சிகள் அனைத்தும் கார்ப்பரேட்டுகளின் கையில் உள்ளன – கார்ப்பரேட்டுகள் அனைத்தும் மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் பாரதிய ஜனதாவின் பையில் உள்ளன. எனவே தமிழ்நாட்டு இந்துத்துவ அற்பர்கள் அர்த்த ராத்திரியில் மட்டுமல்ல, ஏடாகூடமான இடங்களில் கூட குடை பிடித்து அலைகின்றனர். சென்ற சட்டமன்றத் தேர்தலில் நோட்டாவை விட ஒன்றரை சதவீத ஓட்டுக்கள் கூடுதலாக பெற்ற பாரதிய ஜனதா, தமிழ்நாட்டின் எல்லா செய்தித் தொலைக்காட்சிகளின் விவாதங்களிலும் இடம் பிடித்துக் கொள்கின்றனர்.
கோணவாய்காம் பாளையத்தின் பொதுக் கக்கூசு அடைத்துக் கொள்ளும் அதிமுக்கியமான பிரச்சினையை மோடியால் எப்படித் தீர்க்க முடியும் என்று “கட்டிடக்கலை நிபுணர்” ராமசுப்பிரமணியம் விளக்குகிறார். உண்மையில் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த இந்த ஆசாமி, பொருளாதார நிபுணராகவும், நிதி ஆலோசகராகவும், மருத்துவ நிபுணராகவும், கல்வியாளராகவும் பல்வேறு அவதாரங்களை எடுக்கிறார். கோமாளியாகத் தெரிந்தாலும் பரவாயில்லை, ஆனால் மக்கள் தினசரி தங்கள் மூஞ்சிகளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமென்பது பாரதிய ஜனதாவின் கணக்கு.
ஊடக வெளிச்சம் தங்கள் மேல் தொடர்ந்து விழுவதன் மூலம் என்றாவது பவர் ஸ்டார் ஹீரோவானதைப் போல் தமிழ்நாட்டின் ஆட்சியைப் பிடிக்கும் நிலைக்கு மேலேறிச் சென்று விடலாம் என்பது பாரதி ஜனதாவின் கனவு. ராமசுப்பு கோமாளியாக இருந்தாலும், கேடி ராகவன், நாராயணன், கல்யாண் ராம் போன்ற ‘ரவுடி’ பார்ப்பான்கள் வேறு ரகம். விவாதங்களில் நேரடியாக மிரட்டுவது, பச்சையாக புளுகுவது, பொய்யான புள்ளிவிவரங்களை அடுக்குவது – இதையெல்லாம் “ரைட் ராயலாக” செய்வது இவர்கள் பாணி.
இதற்கு ஊடக முதலாளிகள் துணை போவதைப் புரிந்து கொள்ள முடிகின்றது – பச்சமுத்துவுக்கு ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களும், கணிமக் கொள்ளையன் வைகுண்ட ராஜனுக்கு சி.பி.ஐ விசாரணையும், இன்னபிற முதலாளிகளுக்கு மோடியின் வருமானவரித் துறையும் கண் முன்னே வந்து செல்லும் என்பதையும் கூட புரிந்து கொள்ள முடிகின்றது.
ஆனால், கார்ப்பரேட் ஊடகங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களும், ஊழியர்களும் ஹரியானாவை நினைத்துப் பார்க்க வேண்டும். நாளை இங்கும் இந்துத்துவ குரங்குகளின் கையில் அதிகாரம் கிடைத்தால் அவை முதலில் உங்கள் காதுகளைத் தான் கடித்துத் துப்பும். இன்று ஹரியானாவில் சிவனின் வயிற்றில் பாய்ச்சப்பட்ட கத்தி நாளை பாரதிய ஜனதா அதிகாரத்துக்கு வந்தால் உங்கள் கழுத்திலும் இறங்கலாம். அதற்குக் காரணம் ஹெச்.ராஜா பேசும் போது விளம்பர இடைவெளி விட்ட “மாபெரும் ஹிந்து தர்ம விரோத நடவடிக்கையாக” கூட இருக்கலாம்.
– முகில்  vinavu.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக