ஞாயிறு, 4 ஜூன், 2017

தயார் நிலையில் உள்ள ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்

4 டன் வரையிலான அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை சுமந்து செல்லும் திறன் படைத்த ஜிஎஸ்எல்வி மார்க்-3 டி-1 ராக்கெட், ஜிசாட்-19 செயற்கைக்கோளுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து திங்கட்கிழமை மாலை 5.28 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுன்–டவுன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.58 மணிக்கு தொடங்கியது. உள்நாட்டிலேயே கிரையோஜெனிக் தொழில் நுட்பத்தில் இஸ்ரோ தயாரித்துள்ள ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட், ஜிசாட் 19 செயற்கைக்கோளுடன் திங்கட்கிழமை (5-ம் தேதி) விண்ணில் செலுத்தப்பட உள்ளது. 4 டன் எடையுள்ள செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் திறன் வாய்ந்த இந்த வகை ராக்கெட்டை இஸ்ரோ முதல்முறையாக ஏவுகிறது. இதனால் இத்திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ராக்கெட்டை செலுத்துவதற்கான ஆயத்தப் பணிகளை இஸ்ரோ தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ராக்கெட் புறப்படுவதற்கான 25 மணி 30 நிமிட கவுன்ட் டவுன் இன்று பிறபகல் 3.58 மணிக்கு தொடங்கியது. கவுன்ட் டவுன் முடிந்ததும், நாளை மாலை 5.28 மணிக்கு ஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்.
ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படுவதன் மூலம் இந்தியா விண்வெளி ஆராய்ச்சி துறையில் புதிய மைல்கல்லை எட்ட உள்ளது. வணிக ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் இஸ்ரோ புதிய சாதனை படைக்கு  tamilthehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக