புதன், 14 ஜூன், 2017

மேற்கு லண்டனில் 27 அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ

லண்டன், இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனின் மேற்கு பகுதியில் உள்ள லதிமோர் சாலையில் கிரீன்பெல் டவர் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 1974 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம் 27 மாடிகள் கொண்டதாகும். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 120 பிளாட்கள் உள்ளன. லண்டனின் உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.16 மணியளவில் இந்த கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இரண்டாவது தளத்தில் இருந்து 27-வது தளம் வரை தீ பற்றி எரிந்தது. பயங்கர தீயை அணைக்கும் பணியில் 40 தீ அணைப்பு வாகனங்களில் வந்த 200 தீ அணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கட்டிடத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். புகை மூட்டம் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்ட இருவர் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு முழுவதும் தீ பற்றி எரிவதால் 120 வீடுகளில் வசித்து வந்தவர்களின் நிலை என்னவென்று தெரியாததால் அச்சம் ஏற்பட்டுள்ளது.  தினதனி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக