ஞாயிறு, 25 ஜூன், 2017

ஓடும் ரயிலில் 16 வயது இளைஞன் அடித்து கொலை .. மாட்டு இறைச்சி கொலை!

ஹரியானாவில் உள்ள தனது கிராமத்துக்கு டெல்லியிலிருந்து ரயிலில்
பயணித்துக்கொண்டிருந்த 16 வயது ஜுனைத், கும்பல் வன்முறைக்கு பலியானார். தனது சகோதரர்கள் நால்வருடன் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாட டெல்லியிலிருந்து மாட்டிறைச்சி வாங்கிக்கொண்டு கிளம்பியிருக்கிறார் ஜுனைத்.
தங்களுடன் பயணித்த சக பயணிகள் இவர்களை மத ரீதியாக கேலி செய்ய ஆரம்பித்திருக்கிறது. மாட்டிறைச்சி வைத்திருந்ததை அறிந்துகொண்டு ஜுனைத் உள்ளிட்ட நால்வரையும் அடிக்க ஆரம்பித்துள்ளனர். கும்பல் வன்முறையிலிருந்து தப்பிக்க சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்த முயற்சித்துள்ளனர்.  டெல்லியிலிருந்து 20 கிமீ தூரத்தில் அசாவதி என்ற இடத்தில் ரயில் நின்றவுடன் ஜுனைத் தூக்கி வீசப்பட்டிருக்கிறார். படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு சகோதரர்களால் கொண்டு செல்லப்பட்ட ஜுனைத் இறந்துவிட்டார்.

தாக்குதல் நிகழ்த்தப்பட்ட ரயில் பெட்டி ரத்த வெள்ளத்தில் காட்சியளிப்பதாக தெரிவிக்கிறது என்டிடீவி.  தாக்குதலுக்கு உள்ளான மற்ற மூவரும் அளித்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்டர்வரில் ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார் thetimestamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக