வியாழன், 25 மே, 2017

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படம் காலா ! BR 1956.. ?

BR என்ற வார்த்தை யாரை குறிப்பது? இந்த 1956 வருடம் யார் இறந்த வருடம்?
மிக சிறு குழந்தைக்கும் புரியும்
காலா’ படத்தின் தலைப்பு பற்றி இயக்குநர் ப.ரஞ்சித் கூறும் போது: நெல்லை வட்டாரங்களில் எமனை ‘காலா’ சாமியாக வழிபடுவார்கள். மும்பையில் வசிக்கும் நெல்லை வட்டார மக்களின் வாழ்க்கையைச் சொல்வது “காலா”. மேலும் கரிகாலன் என்ற பெயரின் சுருக்கமே காலா, ரஜினிக்கு பிடித்த பெயர் என்பதால் காலா என வைக்கப்பட்டுள்ளது என்றார். 

'2.0' படத்தைத் தொடர்ந்து மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. தனுஷ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கிய கபாலி திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தை தன்னுடைய வொண்டர் பார் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக நடிகர் தனுஷ் அறிவித்திருந்தார்.
இப்படம் மும்பை தாதா ஹாஜி மஸ்தானின் கதை என்று தகவல்கள் வெளியானது. இதையடுத்து, தனது தந்தையை தவறாக சித்தரித்துப் படம் எடுத்தால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர் சேகர் மிஸ்ரா, ரஜினிக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

இந்நிலையில் ‘நாங்கள் தயாரித்து வரும் ரஜினி-161 படம், மும்பை பின்னணியை கொண்ட கற்பனை கதை மட்டுமே. இப்படத்தின் கதை, யாருடைய வாழ்க்கை வரலாற்றையோ அல்லது அவர்களுடைய நிஜ சம்பவங்களையோ கொண்டு உருவாக்கப்பட்ட கதை கிடையாது என வொண்டர் பார் நிறுவனத்தின் சார்பில் அறிக்கை விடப்பட்டது.
இதையடுத்து, ரஜினியின் 164வது படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது. படத்தின் தலைப்பு வெளியானால் அது எந்தமாதிரியான கதையாக இருக்கும் எனக் கணித்துவிடலாம் எனப் பலரும் எதிர்பார்த்திருக்கின்றனர். இப்படத்தின் தலைப்பு என்ன என்ற அறிவிப்பை மே 25ம் தேதி காலை 10 மணிக்கு அறிவிப்பதாகத் தயாரிப்பாளர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் கடும் உற்சாகமானார்கள்.
அதன்படி இன்று (மே 25) காலை 10 மணிக்கு தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில், 'காலா’ என்ற தலைப்புடன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். படத்தலைப்புக்கு கீழே 'கரிகாலன்' என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதையடுத்து சமூகவலைத்தளங்களில் தற்போது ‘காலா’ கரிகாலன்’ ஹாஷ்டேக் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு ட்ரெண்ட் ஆகி வருகிறது.

’காலா’ படத்தின் தலைப்பு பற்றி இயக்குநர் ப.ரஞ்சித் கூறும் போது: நெல்லை வட்டாரங்களில் எமனை ‘காலா’ சாமியாக வழிபடுவார்கள். மும்பையில் வசிக்கும் நெல்லை வட்டார மக்களின் வாழ்க்கையைச் சொல்வது “காலா”. மேலும் கரிகாலன் என்ற பெயரின் சுருக்கமே காலா, ரஜினிக்கு பிடித்த பெயர் என்பதால் காலா என வைக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் ரசிகர்களுக்கு பிடித்த கதையைக் கொண்ட ஒரு ஆக்‌ஷன் படமாக இருக்கும் . காலா ஹாஜி மஸ்தான் பற்றிய எந்தத் தகவலும் இதில் இடம் பெறாது. சொல்லப்போனால்அவரது பெயர் கூட இல்லாத படம்தான் ‘காலா’ . இதன் கதைக்களம் வேறு. தெளிவாக மறுப்பு சொல்லப்பட்டிருக்கிறது அவருடையக் கதையில்லை என்று. காலா திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்ட்டர் இன்று (25-5-2017) மாலை வெளியிடப்படுகிறது’ என்று கூறியுள்ளார்.
மேலும் இந்தப் படத்தை பற்றி சமூக வலைத்தளத்தில் அதிகமான புரளிகள் சுற்றி வருவதால் படக் குழுவினர் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே படத்தலைப்பை அறிவித்துள்ளனர்.
ஹியூமா குரேஷி நாயகியாக ஒப்பந்தமாகியுள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். மும்பையில் முதற்கட்ட படப்பிடிப்பை தொடங்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு. அதனைத் தொடர்ந்து சென்னையில் நடைபெறவுள்ள படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொள்ளவுள்ளார். மேலும், இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்துக்கு சமுத்திரக்கனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.படத்தின் எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவாளராக முரளி, சண்டைப் பயிற்சியாளராக திலீப் சுப்பராயன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக