அதிமுக
இரு அணிகளாகப் பிரிந்த நிலையில், கட்சியின் பொதுச்செயலாளரும், துணைப்
பொதுச்செயலாளரும் சிறைக்குச் சென்று விட்டார்கள். ஓ.பி.எஸ்.தரப்பினர்
ஆட்சியையும், கட்சியையும் கைப்படுத்த எடுத்த முயற்சி தோல்வியடைந்து
விட்டது. முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியைத் தக்கவைத்துக்
கொள்ளவும், கட்சியை மீட்கவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், பாப்பிரெட்டிபட்டி எம்.எல்.ஏ.-வுமான பழனியப்பன் தலைமையில், மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடசலம் போன்றவர்கள் 30 ஆதரவு எம்.எல்.ஏ.-க்களுடன் தனி அணியாக, எடப்பாடி பழனிசாமியை மிரட்டும் விதமாகக் கடந்த சிலதினங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். எம்.எல்.ஏ பழனியப்பனுடன் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்பில் இருந்து வருகிறார். இதையடுத்து, எம்.எல்.ஏ பழனியப்பன் செயல்பாடுகளை தெரிந்த முதல்வர் பழனிச்சாமி, அவரது கருத்துக்களை சசிகலா கவனத்திற்கு கொண்டு சென்றார்.
பெங்களூர் சிறை அருகில் ரூம் எடுத்துத் தங்கியிருந்து வரும் விவேக்கிற்கு துணையாக இருப்பவர் பழனியப்பன் மகன் எழில்மாறான். சசிகலா சில தகவல்களை பழனியப்பனிடம் சொல்லவேண்டும் என்றால், எழில்மாறன் மூலமாகச் செய்திகள் போகுமாம். சசிகலாதான் பழனியப்பனை ஆட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்படி கூறியுள்ளார். அதன் பிறகுதான், பழனியப்பன் முதல்வருடன் நெருக்கமாகியிருந்து பணம் கொழிக்கும் திட்டங்களைக் கொண்டு வரவிருக்கிறார் தனது ஆதரவாளர் எம்.எல்.ஏ, தொகுதிகளுக்கு.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக