சசிகலா, விரைவில் தொண்டர்களுக்கு கடிதம் எழுத உள்ளார்,'' என, எம்.எல்.ஏ., கருணாஸ் தெரிவித்தார்.
திருவாடானை எம்.எல்.ஏ., கருணாஸ், நேற்று காலை, 9:00 மணிக்கு, முதல்வர் பழனிசாமியை, அவரது வீட்டில் சந்தித்து பேசினார். பின், அவர் கூறியதாவது: அ.தி.மு.க., கூட்டணி யில் வெற்றி பெற்றேன். அந்த விசுவாசத்தின் அடிப்படையில், அக்கட்சி பொதுச்செயலர் சசிகலாவை, சிறையில் சந்தித்து பேசினேன். ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் என, சசிகலா விரும்புகிறார். அவர் தன் விருப்பத்தை, தொண்டர்களுக்கு கடிதம் மூலம் தெரிவிக்க உள்ளார். விரைவில், அவரது கடிதம் வெளியாகும்.
சசிகலாவை நீக்க வேண்டும் என்ற, பன்னீர்செல்வம் கோரிக்கையில், எனக்கு உடன்பாடில்லை. கருத்து வேறுபாடுகளை மறந்து, அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். ஜெ., அறிவித்த திட்டங்களை, நிறைவேற்ற வேண்டும். அதற்காக, இரு அணிகளும் இணைய வேண்டும். முதல்வரை சந்தித்து, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என, சிலர் வலியுறுத்தி உள்ளனர். அதே கோரிக்கையை, நானும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார். தினமலர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக