நடிகரும் தொலைக்காட்சி நிகழ்ச்சித்
தொகுப்பாளருமான பாலாஜி, தன்னை சாதியைக் குறிப்பிட்டுத் திட்டுவதாக, சென்னை
மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் அவரது மனைவி நித்யா.
இந்த பிரச்னை குறித்து பாலாஜியிடம்
கேட்டபோது, அவரது தரப்பு வாதத்தை நேற்று கூறியிருந்தார். தன்னிடம் எதைப்
பற்றியும் கேட்க வேண்டாம் என நேற்று வரை மறுத்துவந்த நித்யா, பாலாஜியின்
பேட்டியைப் படித்ததும் நம்மிடம் பேசினார்>”பாலாஜிக்கும் எனக்கும் காதலாகி கல்யாணத்தில் முடிஞ்சப்போ என் வயசு 21. அப்போது அவருக்கு 36 வயசு.
ஆனாலும், அவர் மேலே வெச்சிருந்த ஆழமான காதலாலும் அளவிட முடியாத நம்பிக்கையாலும் வீட்டை மீறி அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.
கல்யாணமான புதுசுல சென்னை, அண்ணா நகரில்
இருந்தோம். அப்புறம் ஷிஃப்ட் பண்ணிட்டு, பெரியார் நகர் வீட்டுக்குக்
குடிவந்தோம். அப்படி ஷிஃப்ட் பண்றதுக்கு பொருள்களை எடுத்துவெச்சப்போதான்
அந்தப் பெட்டியைக் கவனிச்சேன்.
‘அவர் நடித்த படங்களின் ஃபோட்டோ, டிராமா
சம்பந்தமான விஷயங்கள் இருக்கும்’ என ஆவலோடு திறந்த எனக்கு அதிர்ச்சி
காத்திருந்துச்சு. பெட்டியில் ஒரு புடவையும் குழந்தையின் சட்டையும்
இருந்துச்சு.
திருமணமான ஒரே மாசத்தில் இப்படிப்
பார்த்ததும் ஷாக்காகி அவர்கிட்ட கேட்டேன். ‘நீ சின்னப் பொண்ணு. உனக்கு என்ன
சொன்னாலும் புரியாது’னு சொல்லி என்னைச் சமாதானப்படுத்தினார்.
அப்போதான், அவர், தனக்கு ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து ஆன விஷயத்தைச் சொன்னார். அதைக் கேட்டதும் மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.
ஆனாலும், இவர்தான் என் வாழ்க்கைனு நினைச்சு வாழ்ந்து வந்தேன். அந்தச் சமயத்தில் ஒரே ஒரு நிகழ்ச்சியை மட்டுமே பண்ணிட்டு இருந்தார்.
பெருசா வருமானம் இல்லை, அதனால
திருமணத்துக்கு முன் போயிட்டிருந்த வேலையை கன்டினியூ பண்ணினேன். முதல் ஆறு
மாசம் என்னோட சம்பளத்தில்தான் குடும்பம் நடந்துச்சு.
அப்படி எல்லாம் கஷ்டங்களைச் சந்தோஷமா ஏத்துக்கிட்டுதான் அவரோடு வாழ்ந்தேன். அப்போலாம் நான் அவருக்கு நல்லவளாகத் தெரிஞ்சேன்.
சில வருஷங்கள் ஆனதும் அவருக்கு நிறைய
வாய்ப்புகள் வந்துச்சு. அப்புறம்தான் அவரோட சுயரூபம் தெரிய ஆரம்பிச்சது.
கல்யாணத்துக்கு முன்னாடி நெற்றியில் பட்டைப் போட்டுட்டு அவ்வளவு மங்களகரமாக
இருப்பார்.
கல்யாணமானத்துக்கு முன்பு அவர்
குடிப்பழக்கத்தை காட்டிக்கொண்டதில்லை. ஆனால் கல்யாணத்துக்குப் பிறகு
பாட்டிலை ஒளிச்சு வச்சுக் குடிச்சார்.
அப்பவும் சோஷியல் டிரிங்கராகத்தான்
நினைச்சேன். ஆனால், நாளுக்கு நாள் குடிக்கு அடிமையாகும் அளவுக்குப் போனார்.
கொஞ்ச நாளில் மாறிடுவார், குழந்தை வந்துட்டா சரியாகிடும்னு
பொறுத்துக்கிட்டேன்.
எனக்கு எம்.பி.ஏ படிக்கணும்னு ஆசை.
அதனால், காலேஜ்ல சேர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். அப்போ ‘காலேஜ்ல யார்கூடப்
பேசுற, யார்கூட சுத்துற’னு கேவலமா பேச ஆரம்பிச்சார்.
படிக்கிற இடம், வேலைப் பார்க்கிற இடம்னு
பார்க்காமல் மற்ற ஆண்களுடன் சேர்த்து வெச்சி தகாத வார்த்தைகளால் திட்டி
கஷ்டப்படுத்தினார். ஒவ்வொரு இடத்திலும் அவமானத்தால் கூனிக்குறுகி நிற்பேன்”
என்ற நித்யா விசும்பலுடன் தொடர்ந்தார்.
”வீட்டை எதிர்த்து கல்யாணம்
பண்ணியிருக்கோம். மத்தவங்க முன்னாடி வாழ்ந்து காட்டியாகணும் என்கிற
வைராக்கியத்தில் யார்க்கிட்டயும் எதையும் பகிர்ந்துக்காமல் இருந்தேன்.
ஒரு கட்டத்துக்கு மேல பிரச்னை அதிகமானதும்
அம்மா வீட்டில் ஒரு வருஷம் இருந்தேன். அப்போ மகேஷ் அண்ணா அம்மா வீட்டுக்கு
வந்து, கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பேசி சமாதானப்படுத்தினார்.
அதற்குப் பிறகுதான் என் அப்பா நாங்க இப்ப
குடியிருக்கிற வீட்டை என் பொண்ணோட பிறந்தநாளுக்கு பரிசாக்கொடுத்தார். என்
பெயரில் அந்த வீட்டை எழுதி வச்சுட்டார். அதுக்கு அப்புறமாவது நல்லபடியா
இருந்திருக்கலாம்.
ஒரு சில நாளிலேயே வேற மாதிரி நடக்க
ஆரம்பிச்சுட்டார். எந்தப் பிரச்னை வந்தாலும் உடனே என் போனைத் தூக்கிப்
போட்டு உடைப்பார். லேப்டாப்பையும் உடைச்சுட்டார். இப்படிப் பல செல்போன்களை
உடைச்சிருக்கார்.
கூடவே என்னை கடித்தும் வைத்திருக்கிறார்.
அடுத்து வீட்ல இருக்கிற டி.வி, ஜன்னல் கண்ணாடினு உடைச்சு சேதப்படுத்துவார்.
என்னையும் பல முறை அடிச்சு காயப்படுத்தியிருக்கார். எல்லாத்தையும்
குழந்தைக்காகப் பொறுத்துக்கிட்டேன்.
நான் ஆபீஸ் போயிட்டு வந்த நிறைய நாட்கள்
என்னை வீட்டுக்கு வெளியே தள்ளி கதவைச் சாத்தியிருக்கார். அவர் சொன்ன மாதிரி
நாங்க இரண்டு பேரும் கஷ்டப்பட்டுத்தான், அப்பா எனக்கு எழுதிவெச்ச
வீட்டுக்கு மேலே மாடி வீடு கட்டினோம்.
இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்த பிறகு
இப்படி நடந்துக்கிறதுதான் வேதனையா இருக்கு. இப்போ வரைக்கும் அவர் மேல ஒரு
ரூபாய்க் கூட கடன் இல்லை. எல்லா கடனும் என் பெயர்லதான் இருக்கு.8 'பாலாஜிகூட வாழ்ந்தது போதும்!’’ - கலங்கும் நித்யா 'பாலாஜிகூட வாழ்ந்தது போதும்!’’ - கலங்கும் நித்யா mani8
‘ஷூட்டிங் இல்லாத நாள்களில் காலையில் பதினொரு மணிக்கு மேல ஆரம்பிக்கிற குடி, நைட்டு ஏழு மணிக்கு இன்னும் அதிகமாக இருக்கும்.
அந்த எஃபெக்ட் விடிய விடிய இருக்கும். சண்டையோட பேச்சுவார்த்தை முத்தி, நைட்டு இரண்டு மணிக்கு மேலேதான் சண்டை ஸ்டார்ட் ஆகும்.
காலையில நாலு, அஞ்சு மணிக்கு நிற்கும்.
இப்படித்தான் என்னோட குடும்ப வாழ்க்கைப் போயிட்டு இருக்கும். இப்படியே
தொடர்ந்து செய்துட்டு இருக்கார்னுதான் அண்ணாநகர்ல இருக்கிற ஒரு தனியார்
மருத்துவமனை மனநல மருத்துவர்கிட்ட கூட்டிட்டுப் போனேன்.
அவ்வளவு தூரம் செலவு செஞ்சும் டாக்டர்
கொடுத்த மாத்திரையை அவர் சாப்பிடவே இல்லே. எவ்வளவோ சொல்லிப்
பார்த்துட்டேன், விட்டுக்கொடுத்துப் பார்த்துட்டேன்.
;அவர் குடிச்சிட்டு அவர் அம்மாவையே அடிச்சிருக்கார். என்னை அடிக்க மாட்டாரா என்ன?
வழக்கம்போல போன ஞாயிற்றுக்கிழமையும் பிரச்னை பெருசாகி, மாடிப்படியில் இருந்து என்னை எட்டி உதைத்துத் தள்ளிவிட்டுட்டார்.
;அவர் குடிச்சிட்டு அவர் அம்மாவையே அடிச்சிருக்கார். என்னை அடிக்க மாட்டாரா என்ன?
மாடிப்படி முனை மோதினதுல என் முதுகு
எலும்புல நான்கு எலும்பு முறிஞ்சிடுச்சு. அப்பவும் என் குழந்தையோடு கதவைச்
சாத்திக்கிட்டு வீட்டுக்குள்ளேதான் இருந்தார்.
நான் வலியால் அழுது, கத்தினேன். கடைசியா
நானேதான் ஹாஸ்பிடலுக்குப் போய் அட்மிட் ஆனேன். ரெண்டு நாள் அங்கே இருந்தும்
என்னை வந்து பார்க்கவே இல்லே.
என்னோட பிறந்தநாளுக்கு வந்த கிஃப்ட்
எல்லாத்தையும் வீட்டு ஹால் பக்கத்திலேயேப் போட்டு எரிச்சுட்டார். அதில்
கதவும் சேர்ந்து சேதமாச்சு. அக்கம்பக்கத்துலயும் யாரும் தட்டிக் கேட்க
முடியலை. என் பெற்றோர் கேட்டாலும் ஆபாசமான வார்த்தைகளால் பேசுவார்.
அதனால அவங்களும் இந்த பிரச்னையில்
தலையிடுவதில்லை அப்படி மீறி கேட்டா ஆபாசமா பேசுவார். பொறுக்க முடியாமல்
நூறுக்குப் பலமுறைப் போன் பண்ணாலும் வீட்டுக்கு வந்து
சமாதானப்படுத்திட்டுப் போயிடுறாங்க.
அவர் பிரபலம் என்கிற ஒரே விஷயத்தை வெச்சு
எல்லா இடங்களிலும் தப்பிச்சுட்டு இருக்கார். இதுவரைக்கும் போலீஸ் தரப்பில்
இருந்து என்கிட்ட எந்த விசாரணையும் நடத்தலை.
இப்படி சைக்கோ மாதிரி நடந்துக்கறவரோடு
எட்டு வருஷமா குடும்பம் நடத்தியாச்சு. இன்னும் எத்தனை நாளுக்குத்தான்
பொறுத்துப் போக முடியும். என் குழந்தையும், நானும் இனி எப்படி வாழப்போறோம்.
எல்லா இடத்திலும் என்னை அவமானப்படுத்திட்டார். இனி எங்க போய்
வேலை தேடுவேன்”.
”அவரைப் பொறுத்தவரைக்கும் நான் யார்கூடவும் பேசக் கூடாது, பழகக் கூடாது. வேலைக்குப் போகக் கூடாது. அவர் கையை நம்பி இருக்கணும்.
சரி, அதுக்கும் அவர் சரியா
நடந்துக்கணுமில்லே. இப்படி குடிச்சே குடும்பத்தைக் கஷ்டப்படுத்தினா
எப்படிங்க நிம்மதியா வாழ முடியும்? அவர்கூட வாழ்ந்தது போதும்னு
முடிவு பண்ணிட்டேன்.
அதனாலதான் அவர்கிட்ட விவாகரத்து கேட்டிருக்கேன். என் மேல இருக்கிற பொசசிவ்னாலதான் இப்படி நடந்துக்கிட்டார்னு நினைச்சேன்.
அப்படி இல்லே, நானும் முதல் மனைவி மாதிரி
விட்டுட்டுப் போயிடக் கூடாதுனு நினைக்கிறார் என்பதை இப்போதான்
புரிஞ்சுக்கிட்டேன். இனி என் எதிர்காலமே என் குழந்தைதான். அவருடன் சேர்ந்து
வாழ்வதை என்னுடைய கனவிலும் நான் நினைத்துப்பார்க்கத் தயாராக இல்லை” என
முடித்தார் நித்யா.<;">இது குறித்து பாலாஜி கூறியது: ‘என் மனைவி ஆசைப்பட்டால் ஜெயிலுக்குப் போகவும் தயார்!’ -தாடி பாலாஜி உருக்கம்<55 -="" a="">என் மனைவி ஆசைப்பட்டால் அவருக்காக ஜெயிலுக்குப் போகவும் தயார் என்று நடிகர் தாடி பாலாஜி உருக்கமாக தெரிவித்துள்ளார்.55>
நடிகர் தாடி பாலாஜி குறித்து அவரது மனைவி நித்யா மாதவரம் போலீஸில் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அதில், ‘என்னைச் சாதி சொல்லி தாடி பாலாஜி
திட்டுகிறார், குழந்தையும் என்னையும் கொடுமைப்படுத்துகிறார்’ என்று
தெரிவித்துள்ளார். அதன்பேரில் மாதவரம் போலீஸார் தாடி பாலாஜியிடம் விசாரணை
நடத்தினர்.
அடுத்து, பாலாஜியிடம் இருந்த
குழந்தையையும் நித்யாவிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையில்
இருந்துவரும் நேரத்தில் தாடி பாலாஜி, தன்னையும், குழந்தையையும்
எப்படியெல்லாம் டார்ச்சர் செய்தார் என்று நித்யா நம்மிடம் தெரிவித்தார்.
அந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து
பாலாஜியிடம் கேட்டோம். முதலில் கொஞ்சம் கோபப்பட்ட அவர், அதன்பிறகு அதற்கு
விரிவாக விளக்கம் அளித்தார்.
“நான் அவரை காதலித்துத்தான் திருமணம்
செய்தேன். காதலிக்கும்போதே எனக்கு அவருடைய சாதி எனக்குத் தெரியாதா. சாதி
மறந்து அவரை கரம்பிடித்தேன்.
சாதிச் சொல்லி அவரைத்திட்டியதாக சொல்வதில்
எந்தவித உண்மையும் இல்லை. என்னுடைய மகளின் சாதி சான்றிதழில் என் மனைவியின்
சாதியைத்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. யாராக இருந்தாலும் சாதி சோறு போடாது.
என்னைப் பொறுத்தவரை, எனக்கு எல்லோரும் நண்பர்கள். யாரையும் நான்
பிரித்துப் பார்த்தது கிடையாது.
என் மனைவியை வெளிநாடுகளில் நடந்த சூட்டிங்
இடங்களுக்கும் அழைத்துச் சென்றுள்ளேன். அந்தளவுக்கு அவர் மீது பாசம்
வைத்திருந்தேன். என் மனைவிக்கு நான் கொடுத்த சுதந்திரத்தை அவர் தவறாக
பயன்படுத்தியது எனக்குப்பிடிக்கவில்லை.
நான் ஒரு நடிகன். நடிகன் என்பதற்காக
பொறுக்கிப் போல நான் நடந்தால் என்னைச் சும்மா விட்டுவிடுவார்களா. நான்
புத்தர், காந்தி, ஏசு என்று சொல்லவில்லை.
டிரிங்ஸ் பண்ணுவேன் என்று ஓப்பனாக
சொல்லியிருக்கிறேன். நாங்கள் இருவரும் கஷ்டப்பட்டு உழைத்துதான் வீட்டை
கட்டினோம். நிமிடத்துக்கு நிமிடம் இது என்னுடைய வீடு, என்று சொன்னால்
எப்படியிருக்கும்.
வாடகை வீட்டில் இருந்த போதுகூட கௌரவமாக
வாழ்ந்தேன். என் மாமனார் கொடுத்த வீட்டை டெவலப்தான் செய்திருக்கிறேன்.
என்னுடைய மனைவியின் தந்தை வீடு கட்ட ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தார்.
அதற்கு இதுவரை வட்டி கட்டி வருகிறேன்.
இன்று காலையில்கூட என் வாட்ஸ் அப்பிற்கு மாத்திரைகள் படத்தை அவர்
அனுப்பியிருந்தார். அதைப்பார்த்த நான் வாட்ஸ்அப்பில் ‘டேக் கேர்’ என்று
பதில் அனுப்பினேன்.
அதற்கு அவர் உன்னுடன் நான் சண்டை என்று
பதில் அனுப்பினார். தாங்க்ஸ் என்று சொல்லியிருந்தால் பிரச்னை
முடிந்துபோயிருக்கும். அவர்களைச் சரியாக வழிகாட்ட யாருமில்லை.
அவரது அப்பா, அம்மாவுக்கு
ஆரம்பத்திலிருந்தே என்னைப் பிடிக்கவில்லை. என் மாமனார் அவரை ஒரு டிரம்ப்
என்றே கருதுகிறார். ஆரம்பத்திலிருந்தே என்னுடைய வேலை
அவருக்குப்பிடிக்கவில்லை.
என்னைப்பற்றி அவருடைய குடும்பத்தினரிடம் தேவையில்லாததை என் மனைவி சொல்லியதால் என்னை அவர்களுக்குப்பிடிக்கவில்லை.
என் மனைவி அரைமணிநேரம் தனியாக இருந்து
யோசித்தால் எல்லா பிரச்னைக்கு முடிவு கிடைத்துவிடும். என் மனைவியுடன்
இருப்பவர்கள் பணத்துக்காக அவருடன் இருக்கிறார்கள்.
அவர்கள் அவருக்குத் தவறான
வழியைக்காட்டுகின்றனர். என் மனைவி ஆஸ்பத்திரியில் இருந்தபோதுகூட அவருக்கே
தெரியாமல் டாக்டரிடம் விசாரித்தேன்.
எனக்கும் என் மனைவிக்கும் சண்டை நடந்த அன்று அவர், என்னையும், குழந்தையையும் வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்துவிட்டு சென்றுவிட்டார்.
மாடிப்படியிலிருந்து தவறி விழுந்ததற்காக
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளார். அவர், வீட்டை பூட்டிவிட்டு
சென்றுவிட்டதால் நானும், குழந்தையும் உள்ளேதான் இருந்தோம்.
போலீஸாரும், வழக்கறிஞர்களும் கதவை
திறந்தபிறகுதான் வெளியில்வந்தோம். அப்போது என்னை விசாரணை நடத்திய போலீஸார்,
குழந்தையைக் கடத்திவிட்டதாகக் கூறினர்.
அதற்கு நான். வீட்டில்தான் குழந்தை
இருக்கிறது. அப்படியிருக்கும்போது எப்படி கடத்த முடியும் என்று கேட்டேன்.
உடனே போலீஸார், ‘குழந்தையை உங்கள் மனைவியிடம் ஒப்படைத்துவிடுங்கள்’ என்று
தெரிவித்தனர்.
உடனே நானும் குழந்தையை
ஒப்படைத்துவிட்டேன். நூறுசதவிகிதம் என் மனைவியை பார்த்துக் கொண்டதைவிட என்
குழந்தையைப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.
சூட்டிங் ஸ்பார்ட்டில் கூட குழந்தையை
மடியில் வைத்து கொண்டு உணவு ஊட்டுவேன். அது எல்லோருக்கும் தெரியும். என்
மனைவி பேசியதை அமைதியாக கேட்டுக் கொண்டு இருப்பதற்கு காரணம் என் குழந்தையே.
என்றுமே என் மனைவியைக் குறித்து குறை சொல்லமாட்டேன். முதல் மனைவியை விவகாரத்து செய்தபிறகே நித்யாவை திருமணம் செய்தேன்.
எல்லாமும் அவருக்குத் தெரியும். என்னை
போலீஸ் நிலையத்துக்கு அழைத்து, ஜெயிலில் அடைக்க வேண்டும் என்பதே என் மனைவி
தரப்பினரின் குறிக்கோளாக உள்ளது.
என் மனைவி ஆசைப்பட்டால் அவருக்காக
ஜெயிலுக்கு போகவும் நான் தயார். அதற்கு முன்பு என் மனைவி கடந்த கால
வாழ்க்கையை கொஞ்சம் நினைத்துப்பார்க்க வேண்டும்” என்றார் கண்ணீர் மல்க. வெப்துனியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக