வெள்ளி, 26 மே, 2017

குடியரசு தலைவர் வேட்பாளர் .. எதிர்கட்சிகள் டெல்லியில் முக்கிய ஆலோசனை!

The opposition's candidate for the next President of India will be decided on today. டெல்லி: பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை முடிவு செய்ய இன்று எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்த உள்ளன.
குடியரசுத் தலைவராக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 14-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதனால் ஆளும் கட்சியான பாஜக கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் ஜனாதிபதி வேட்பாளராக தங்களது கட்சியை சேர்ந்தவர்தான் நியமிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். அதற்கான ஆலோசனைகளில் இரு தரப்பும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே  ஜனாதிபதி தேர்தலில், பொது வேட்பாளரை களமிறக்குவது பற்றி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார். பாஜக சார்பில் ஜார்க்கண்ட் ஆளுநராக உள்ள திரௌபதி முர்முவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க பாஜக முடிவு செய்துள்ளது.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்த வரை பெரிய கூட்டணியை அமைத்து வேட்பாளரை களம் இறக்கவுள்ளது. இக்கூட்டணியில் பகுஜன் சமாஜ் கட்சியையும் இணைக்க அது முயற்சித்து வருகிறது. பாஜகவுக்கு கடும் போட்டியைக் கொடுக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை கோபால் கிருஷ்ண காந்தி, சரத் யாதவ் மற்றும் மீரா குமார் ஆகியோரின் பெயர்களை பரிசீலித்து வருகின்றன. எனினும் சரத் பவார் இதை மறுத்துள்ளார்.
இந்நிலையில் தங்கள் வேட்பாளர் குறித்து இன்று எதிர்க்கட்சிகள் கூடி ஆலோசனை நடத்தவுள்ளன. இந்த ஆலோசனை கூட்டம் பாராளுமன்ற நூலக கட்டடத்தில் நடைபெறுகிறது. பா.ஜ.க அரசுக்கு எதிராக இதரக் கட்சிகள் ஒன்றிணைந்து இந்தத் தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.  tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக