govi.lenin?
எந்த
இடத்திலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல் திராவிட இயக்கத்திற்கும்
அதனுடைய கொள்கைகளுக்காகவும் மட்டுமே தன்னுடைய சிந்தனையையும் பேனாவையும்
அர்ப்பணித்தவர் மூத்த பத்திரிகையாளர் சின்னகுத்தூசி. தந்தை பெரியாரால்
திருச்சியிலுள்ள ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டு, அவருடைய
செலவிலேயே புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து சின்னகுத்தூசி என்று பின்னாளில்
புனை பெயர் கொண்ட திருவாரூர் தியாகராஜனை படிக்கச் செய்தார்.சின்னகுத்தூசியின் எழுத்துகள் பெரியாரின் கொள்கைகளையும் , திராவிட இனத்தின்
நலனையும், தமிழ்மொழியின் வளர்ச்சியையும் வலியுறுத்தியவை. அந்த
நிலையிலிருந்து அவர் ஒருபோதும் மாறியதில்லை. அவர் தன் வாழ்நாளில்
ஏற்றுக்கொண்ட ஒரே விருது, முரசொலி அறக்கட்டளை வழங்கிய விருது மட்டும்தான்,
அந்த விருதை 30-1-2006 அன்று வழங்கிப் பேசிய ஓய்வறியா உழைப்பாளியான கலைஞர்,
“எனக்கு சோர்வு சிறிது ஏற்பட்டால், களைப்பு சிறிது தோன்றினால்,
இல்லத்திலிருந்து நான் முரசொலி அலுவலகத்திற்கு செல்கிறேன் என்றால்
எழுதுவதற்காக மாத்திரமல்ல. ஏற்பட்ட சோர்வை நீக்க-கவலைகளைப் போக்கிக்கொள்ள
அங்கே சென்றால் சின்னகுத்தூசியைப் பார்க்கலமே, உரையாடலாமே அதன் காரணமாக
மனதிற்கு ஒரு நிம்மதியைத் தேடிக்கொள்ளலாமே என்பதற்காகவும் நான் முரசொலி
அலுவலகத்திற்குச் செல்வதுண்டு” என்றார். விருதினை விடவும் மதிப்புமிகு
சொற்கள். தி.பி. 2048 வைகாசி-8
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக