திங்கள், 24 ஏப்ரல், 2017

சமுக வலையில் ஆணாதிக்க வன்மம் ? தூக்கி எறியவேண்டிய நேரமிது!

மீனா சோமு : சமூக வலைத்தளங்களுக்கு ஆண்கள் எதுக்காகவெல்லாம் வராங்களோ, அந்த காரணங்களுக்காகத் தான் பெண்களும் வராங்க. இந்த வெட்டி ஆராய்ச்சிய விட்டுட்டு அவனவன் வந்த வேலைய பாருங்கடே.
என்னமோ இவங்க( சில ஆண்களின்) மூளையெல்லாம் நியூரான்ங்களால் இயங்குறா மாதிரியும் பெண்கள் மூளையிருக்குமிடத்தில் வாஜினா இருப்பது போலவும் டயலாக்கு விட்டுட்டு. இப்படியெல்லாம் பதிவிட வெக்கமாயிருக்காதா ? இதில் சிறந்த பதிவர் என்ற பட்டத்தை கொடுத்து ஜால்ரா அடிக்கிறது ஒரு கூட்டம்.
என்ன பிரச்சனை இவங்களுக்கு ? சமூக வலைதளங்களை பெண்கள் எப்படி உபயோகிக்கிறார்கள் என்பதோ அவங்க படுக்கையறையில் யார் இருக்கிறார்கள் என்பதோ அடுத்தவனுக்கு ரொம்ப அவசியமான விசயமா ? அது சரி... 35+ அல்லது 45+ என்ன எழுதனும், எப்படி வாழனும் என்பதையெல்லாம் விமர்சிக்கும் தகுதியை யாரு உங்களுக்கு கொடுத்தது ?
எங்களுக்கான தேவையென்ன என்பதை நாங்கள் முடிவு செய்து கொள்வோம். எங்களை அளவிட உங்களுக்கு யார் உரிமை தந்தார்கள் ?
பெண்கள் தங்களது இன்பாக்சில் வந்து அத்துமீறி நுழைபவனை குப்பையாக தூக்கி கடாசுவது போல, இத்தகைய விமர்சனங்களையும் குப்பையாக சாக்கடையில் வீச வேண்டும் தோழிகளே.

தோழிகளே, உங்களை இந்த ஆணாதிக்க உலகிற்கு நிரூபிக்க என்றும் முயற்சி செய்யத் தேவையில்லை. உங்களின் பாலின சமத்துவ இருப்பு ஆணாதிக்க உலகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கத்தான் செய்யும். இப்படி சகதிகளை உங்கள் மீது எறிய தான் செய்வார்கள்.
வெளியில் வேலைக்கு சென்ற பெண்களை சோரம் போனவர்களாக இழிவாக பேசிய சமூகமிது. அப்படி வேலைக்கு சென்ற பெண்கள், அப்படி பேசியவர்களை மயிராக மதித்ததால் தான்...இன்றைய பெண்களின் வெளி பரந்துபட்டிருக்கிறது.
சமூகத்தளத்தில் ஒவ்வொரு பெண்ணும் என்ன செய்யவேண்டும் என்று கிளாஸ் எடுக்கும் யோக்கியதை இந்த ஆணாதிக்க சமூகத்திற்கு கிடையாது. அதை பெண்களாகிய நாங்கள் தீர்மானித்துக் கொள்கிறோம்.  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக