திங்கள், 24 ஏப்ரல், 2017

ஸ்டாலின் வேண்டுகோள் :தி.மு.க. அலுவலகங்கள் அனைத்திலும் நூலகங்கள் செயல்பட வேண்டும்

தி.மு.க. அலுவலகங்கள் அனைத்திலும் நூலகங்கள் செயல்பட வேண்டும் கட்சி தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
தி.மு.க. அலுவலகங்கள் அனைத்திலும் நூலகங்கள் செயல்பட வேண்டும் கட்சி தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் ஆசியாவிலேயே 2-வது பெரிய நூலகம்< ஒவ்வொரு வீட்டிலும் சமையலறை, குளியலறை, படுக்கையறை இருப்பது போல படிப்பதற்கென ஓர் அறை இருக்க வேண்டாமா எனக் கேட்டவர் பேரறிஞர் அண்ணா. வீடுகள் தோறும் நூலகம் அமைய வேண்டும் என்பது அவரது பெரு விருப்பம். அந்த விருப்பத்தின் ஒரு பகுதியாக ஊர்கள் தோறும் முதற்கட்டமாக நூலகங்கள் அமையட்டும் என அவரது பெயரிலான அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், 2006-2011 தி.மு.க. ஆட்சி காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் பொறுப்பினை நான் வகித்தபோது ஊராட்சிகள் தோறும் நூலகங்கள் தொடங்கப்பட்டன. அண்ணாவின் நூற்றாண்டில் அவருக்குப் பொருத்தமான நினைவுச்சின்னமாக சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைத் தலைவர் கருணாநிதி உருவாக்கினார். ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் அது.


உழைப்பது, உண்பது, உறங்குவது, உற்சாகப் பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது இவையெல்லாம் எப்படி வாழ்வின் பகுதிகளோ அதுபோல படிப்பதும் நம் வாழ்க்கையில் அன்றாடம் மேற்கொள்ள வேண்டிய செயல் என்ற அடிப்படையில்தான் தி.மு.க. தன் தொடக்க காலத்தில் இருந்தே புத்தகங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. தொடர்ந்து மேற்கொள்ளும் பணிகளில் இடையிடையே தொய்வுகள் ஏற்படும்போது அதன் மீது கவனம் செலுத்தி, மீண்டும் அதை வேகப்படுத்துவது இயல்பு.

புது உலகம் படைப்போம்

தமிழகத்தின் பல மாவட்டங் களிலும் தி.மு.க. அலுவலகமான ‘கலைஞர் அறிவாலயம்’ சிறந்த முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. அறிவாலயம் என்ற பெயருக்கேற்ப மாவட்டக் கட்சி அலுவலகங்களில் நல்ல முறையில் நூலகங்களை உருவாக்கி, கட்சியினரும் பொதுமக்களும் பயன்பெறும் வகையில் அதனை சிறப்பாக நடத்தும் பணியை உலகப் புத்தக தினமான இன்றே(நேற்றே) தொடங்கிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மாவட்ட அளவில் முதற்கட்டமாக இதனை நல்லமுறையில் செயல்படுத்தத் தொடங்கியபின், நகர, ஒன்றிய அளவில் உள்ள கட்சி அலுவலகங்களிலும் நூலகங்களைத் தொடங்க முனைப்பு காட்டிட வேண்டும். அடுத்த ஆண்டு உலகப் புத்தக தினம் கடைப்பிடிக்கப்படும்போது, தி.மு.க. அலுவலகங்கள் அனைத்திலும் நூலகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என்ற இனிப்பான செய்தியை உங்களுடன் நானும் பகிர்ந்துகொள்ள வேண்டும். புத்தகங்கள் படிப்போம்! புது உலகம் படைப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  தினத்தந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக