வியாழன், 27 ஏப்ரல், 2017

ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டையில் அம்மா .. இன்று உச்சத்தை நெருங்குகிறார்?

காக்கா முட்டையில் இரண்டு சிறுவர்களின் அம்மாவாக நடித்து ஏகப்பட்ட அப்பளாஸ்களை அள்ளியவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்புக்கு தேசிய விருதே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. விருது மயிரிழையில் தப்பியது. ஆனால் அடுத்த படமான 'ஹலோ நான் பேய் பேசுறேன்' படத்தில் குத்தாட்டம் போட்டு ரசிகர்களின் பிபி-யை எகிறவைத்தார். அவரால் எந்தவிதமான கதாபாத்திரத்திலும் நடித்து முத்திரை பதிக்க முடியும் என சமீபத்தில் நிரூபித்த படம் 'தர்மதுரை'. மூன்று கதாநாயகிகள் உள்ள அப்படத்தில், காமக்காபட்டி அன்புச்செல்வி என்னும் கதாபாத்திரம் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்தது.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்து தொடர்ந்து நடித்து வருபவர். தற்போது மலையாள படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் துல்கர் சல்மானுடன் நடித்த 'ஜோமோன்டே சுவிசேஷங்கள்' சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் தனது திறமையான நடிப்பால் கேரள ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.தற்போது நிவின் பாலியுடன் நடித்துள்ள 'சகாவு' திரைப்படம் பரவலான கவனத்தை பெற்று தந்திருக்கிறது. தமிழில் ஐஸ்வர்யா விக்ரம், தனுஷ் இரு முன்னணி நடிகர்களுடன் தற்போது நடித்து வருகிறார். அது பற்றி நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
“வடசென்னை’ படத்தில் குப்பத்து பெண்ணாக நடிக்கிறேன். ஏற்கனவே இதுபோன்ற வேடத்தில் நடித்திருப்பதால் இதில் அதைவிட மாறுபட்ட நடிப்பை கொடுத்து வருகிறேன்.இந்த படத்தில் நடிப்பதன் மூலம் தனுசுடன் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு நனவாகி இருக்கிறது.‘துருவநட்சத்திரம்‘ படத்தில் நடிக்கிறேன். இது விக்ரம் நடிக்கும் படம் என்பது மட்டும்தான் தெரியும். எனக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் என்பதை டைரக்டர் சொல்லவில்லை.இந்த படத்தில் இன்னொரு நாயகியாக ரித்துவர்மா நடிக்கிறார். எங்களில் யார் விக்ரம் ஜோடி என்பது எனக்கு தெரியாது. எப்போதுமே திறமையான நடிப்பை காட்ட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறேன்.
வெறுமனே டூயட் பாடும் வேடத்தில் மட்டும் நான் நடிக்க விரும்புவதில்லை , அழுத்தமான வேடத்தில்தான் நடிக்க விரும்புகிறேன். இந்த படத்திலும் கௌதம் மேனன் எனக்கு அழுத்தமான வேடம் வைத்திருப்பார் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக