புதன், 26 ஏப்ரல், 2017

பன்னீர் பழனிசாமி இணைப்புக்கு தடையாக இருப்பது பணம் மட்டும்தான்! ... கமிசன் ,, மாமூல் .. பேரம் ....

சசிகலா குடும்பத்தினர்   பாஜக மிரட்டலுக்கு பணிந்ததாய் தெரியவில்லை . தொடர்ந்து சிறை செல்கிறார்கள். பன்னீர் பெரும் தவறுகளும் ஊழல்களும் செய்தார்.பாஜகவிடம் பணிந்தார். பவிசாக இருக்கிறார் . By சாந்தி நாராயணன்
சசிகலா குடும்பத்தை முற்றிலும் நீக்க, அமைச்சர்கள் தயங்குவது, அ.தி.மு.க., இரு அணிகள் இணைப்பு பேச்சு துவங்குவதற்கு, முட்டுக்கட்டையாக உள்ளது. இது குறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:சசிகலா குடும்பத்தினர், கட்சியை விட்டு விலக முன்வரவில்லை. அவர்கள், விலகுவது போல் நடிப்பது; இரு அணியினரும் இணைந்த பின், பின்னாலிருந்து கட்சியை இயக்குவது என, திட்டமிட்டு உள்ளனர்.ஏனெனில், கட்சி நிதி என்ற பெயரில், 'மணல் குவாரி, டாஸ்மாக், கேபிள், டிவி' என, மாதந்தோறும், பல கோடி ரூபாய் வருமானம் வருகிறது. இதுதவிர, மின்சாரம் உட்பட, பல்வேறு துறைகளில் விடப்படும், 'டெண்டர்'கள், ஊழியர்கள் நியமனம், இடமாற்றம் போன்றவற்றின் மூலமும், கட்சி நிதி வசூலிக்கப்படுகிறது. இந்த வருமானம் முழுவதும், தற்போது சசிகலா குடும்பத்தினர் கைக்கு செல்வதாக கூறப்படுகிறது. அதை இழக்க விரும்பாமல், தங்கள் ஆதரவாளரான பழனிசாமியே, முதல்வராக தொடர்வது என்றும், மற்றொரு ஆதரவாளர் வைத்திலிங்கத்தை, பொதுச் செயலராக்குவது என்றும் திட்டமிட்டு உள்ளனர். இருதரப்பு பேச்சு என்ற பெயரில், பன்னீர் அணியை அழைத்து பலவீனப்படுத்தவும் முடிவு செய்துள்ளனர். இதை அறிந்ததும், பன்னீர் அணியினர் உஷாராகிவிட்டனர். முதலில், சசிகலா குடும்பத்தினர், கட்சியை விட்டு முழுமையாக விலக்கப்பட வேண்டும்; பொதுச் செயலராக, பன்னீர்செல்வத்தை நியமிக்க வேண்டும் என, நிபந்தனை விதித்துள்ளனர். இதன் காரணமாகவே, இரு அணி பேச்சு துவங்காமல் உள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். - நமது நிருபர் - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக