புதன், 26 ஏப்ரல், 2017

அமெரிக்காவில் இருந்து வெளியேறும் இந்தியர்கள் ... அங்கேயும் இம்சை அரசன் ! இங்கேயும் இம்சை அரசன் !?

;Prasanna VK உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவின் அதிபராக டொனால்டு டிரம் பதிவியேற்றிய பின் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் தாய்நாட்டிற்குத் திரும்ப முடிவு செய்துள்ளனர். டிரம் பதவியேற்றிய நாள் முதல் எச்1பி விசா, அமெரிக்காவில் வாழும் பிற நாட்டவர்களுக்கு எதிரான கருத்துக்கள் எனப் பல விஷயங்களில் இந்தியர்கள் வெறுப்படைந்து தற்போது தாயகம் திரும்பும் படலத்தின் இறங்கியுள்ளது. இந்தியர்கள் டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலத்தில் மட்டும் அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள், இந்தியாவில் வேலை தேடுவோர் எண்ணிக்கை சுமார் 10 மடங்கு அதிகரித்துள்ளதாக டெலாய்ட் நிறுவனத்தின் ஆய்வுகள் கூறுகிறது.


 டிசம்பர் 2016இல் இந்தியாவில் வேலை தேடும் என்ஆர்ஐகளின் எண்ணிக்கை வெறும் 700ஆக இருந்த நிலையில், இந்தியர்களுக்கு எதிரான அமெரிக்க மக்களின் செயல்களைக் கண்டு இந்தியர்கள் தயாகம் திரும்ப முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் மார்ச்2017இல் இந்த எண்ணிக்கை 7000ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்க அரசின் தற்போதைய நிலைப்பாடு தொடர்ந்து நீடித்தால் பல ஆயிரக்கணக்கான திறமையானவர்களை இழக்க நேரிடும். விசா விண்ணப்பம் அதேபோல் 2018ஆம் ஆண்டுக்கான எச்1பி விசா பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரலாறு காணாத வகையில் குறைந்துள்ளது.

மேலும் கடந்த 5 வருடத்தில் இதுவே குறைவான அளவாகும் என்றும் அமெரிக்கக் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. 2 லட்ச விண்ணப்பம் எச்-1பி விசா விண்ணப்பம் ஒவ்வொரு ஆண்டும் 2,00,000 அதிகமாக விண்ணப்பம் பெறுவது வழக்கம். 2014 ஆண்டு முதல் இது வரை 2 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்களையே பெற்று வந்த அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு இந்த ஆண்டு வரம்பை விடக் குறைவான விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது ஆச்சிரயத்தை ஏற்படுத்தியுள்ளது.

 மேலும் பல தடைகள் எதிர்ப்புகளைத் தாண்டி டிரம்ப் எச்1பி விசா அளிப்பு விதிமுறைகளை மறுஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். இது டிசிஎஸ், இன்போசிஸ், மெப்சிஸ், காக்னிசென்ட் ஆகிய நிறுவனங்களை அதிகளவில் பாதிக்கும். மேலும் இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில் தனது வர்த்தகத்தை இழக்கக் கூடாது என்பதற்காக அமெரிக்கக் கல்லூரிகளில் இருந்து வெளியேறும் மாணவர்களை நேரடியாகப் பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது. எப்படி இருந்தாலும் இதன் மூலம் இந்திய ஐடி நிறுவனங்களின் செலவுகள் அதிகரிக்கும் ஆஸ்திரேலியா அரசு வொர்க் விசாவான 457 விசாவிற்குத் தடை விதித்துள்ளது.

அமெரிக்காவின் எச்-1பி விசா போன்று ஆஸ்திரேலியாவில் பணிபுரிய வேண்டும் என்றால் 457 விசா தேவை.
 தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களுக்காக 457 விசா ஒவ்வொரு ஆண்டும் 95,000 ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்றது.
ஆஸ்திரேலியாவில் வேலையின்மை அதிகரித்து வரும் காரணத்தினால் இப்போது 457 விசாவிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 457 விசா என்றான் என்ன?
ஆஸ்திரேலியாவில் தங்களுக்குத் தேவையான திறன் வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்றால் தற்காலிகமாக நான்கு ஆண்டுகளுக்கு 457 விசா பயன்படுத்தி வெளிநாட்டு ஊழியர்களைப் பணியில் ஆஸ்திரேலியா நிறுவனங்களால் பணியில் அமர்த்த முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக