செவ்வாய், 11 ஏப்ரல், 2017

பன்னீரின் சகோதரரர் ராஜா , மகன் ரவீந்திரநாத் கைதுக்கு இடைக்கால தடை!

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மற்றும் சகோதரர் ராஜா ஆகியோரைக் கைது செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது. ஏப்ரல் 6-ம் தேதி நேதாஜி நகர் மசூதி அருகே ஓ.பன்னீர் செல்வம் தரப்பினருக்கும், அங்கு தேர்தல் பணிமனை அமைத்திருந்த டி.டி.வி. தினகரன் தரப்பினருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக காவல்துறையினர் இருதரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும் சரவணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மற்றும் சகோதரர் ராஜா ஆகியோர் மீது தண்டையார்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு இரண்டு பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக