செவ்வாய், 11 ஏப்ரல், 2017

மதுக்கடைக்கு எதிராக போராடிய மக்களை அடித்து துவைத்த போலீஸ் ! பெண்ணின் கன்னத்தில் பளார் விட்ட ரவுடிப்போலீசின் வீரம்?

கொள்ளையடித்தவர்கள், கூட்டு களவானிகள் எல்லாம் கொலுபொம்மைகளாக அரசாங்கத்தில் உலாவர, உரிமைக்கு போராடினால் பொதுமக்களுக்கு இதுதான் தண்டனையா?
கன்னத்தில் அறைந்த போலீஸ் தடியடி மண்டை உடைப்புதொடர் போராட்டம்மதுக்கடைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது கொடூரமாக தடியடி நடத்தி பெண்களை அறைந்து தாக்கிய சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர்: மதுக்கடையை குடியிருப்பில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக வழியில் போராடிய திருப்பூர் சாமளாபுரம் பெண்களை ஈவிரக்கமில்லாமல் கன்னத்தில் அறைந்து தாக்கிய திருப்பூர் கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜனின் செயல் தமிழகத்தை கொந்தளிக்க வைத்துள்ளது.
நெடுஞ்சாலைகளில் மதுகடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் நாடு முழுவதும் சரிபாதை மதுபான கடைகளை மூட வேண்டிய நிலை உருவானது.
மதுபான கடை வருவாயை மலையென நம்பியிருக்கும் தமிழக அரசு விழிபிதுங்கிக் கிடக்கிறது. தமிழகம் முழுவதும் குடியிருப்புகளுக்கு மத்தியில் மதுபான கடைகளை திறப்பதில் படுமும்முரமாக இருக்கிறது.
ஆனால் பொதுமக்களோ உயிரே போனாலும் எமனாக இருக்கும் மதுபான கடையை திறக்க அனுமதிக்க மாட்டோம் என திரும்பிய திசையெங்கும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இத்தகைய போராட்டங்களின் ஒருபகுதிதான் திருப்பூர் சாமளாபுரத்தில் இன்று நடைபெற்றது."எங்கள் குடியிருப்புக்குள் எந்த ஒரு மதுபான கடையையும் அமைக்க விடமாட்டோம் என காலைமுதல் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டம் முடி..." எங்கள் குடியிருப்புக்குள் எந்த ஒரு மதுபான கடையையும் அமைக்க விடமாட்டோம் என காலைமுதல் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் முடிவுக்கு வருவதாக தெரியவில்லை.="இதனால் ஆத்திரம் அடைந்த திருப்பூர் கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜன் தலைமையில் போராட்டம் நடந்த இடத்தில் போலீஸ் குவிக்கப்பட்டது.
 பொதுமக்களை கலைந்து போக சொல்லியும் போராட்டத்தை பொதுமக்கள் கைவிடவில்லை.
 இதையடுத்து மிருகத்தனமாக போலீசார் தடியடி நடத்தினர். இதில் ஒருவரது மண்டை உடைந்து ரத்தம் ஆறாக ஓடியது. பத்திரிகையாளர்களையும் போலீசாரின் லத்திகள் விட்டுவைக்கவில்லை.

.."கன்னத்தில் அறைந்த போலீஸ்"" இதில் உச்சகட்டமாக கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜன், பெண் ஒருவரது கன்னத்தில் பளார் என அறைந்தது அனைவரையும் பதைபதைக்க வைத்தது. கொள்ளையடித்தவர்கள், கூட்டு களவானிகள் எல்லாம் கொலுபொம்மைகளாக அரசாங்கத்தில் உலாவர, உரிமைக்கு போராடினால் பொதுமக்களுக்கு இதுதான் தண்டனையா?
இது அப்பட்டமான அரச பயங்கரவாதம்... அந்த பெண்ணின் கன்னத்தில் அடித்த கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜனுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.</  tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக