செவ்வாய், 11 ஏப்ரல், 2017

வேற்றுகிரக தொடர்பில் 14 புத்ததகங்கள் எழுதியவரை காணவில்லை

பூமியை
மனிதர்களை தவிர வேற்றுக்கிரகங்களில் வாழக் கூடிய ஜீவன்கள் இருக்கின்றனரா என்ற தேடல் பிரதானமாகி உள்ளது.இந்நிலையில், பிரேசிலைச் சேர்ந்த புருனோ போர்கஸ் என்பவர் வேற்றுக்கிரகவாசி ஒருவருடன் இருப்பதைப் போன்று ஓவியம் ஒன்றை வரைந்து வைத்து விட்டு காணாமல் போய்யுள்ளார்.
;இதில் ஒரு திருப்பு முனையாக காணாமல் போவதற்கு முன்னர் அவர் இரகசிய குறியீட்டு மொழி மூலம் 14 புத்தகங்களை எழுதிவைத்துள்ளார். புத்தகங்கள் மட்டுமின்றி சுவர்களிலும் தரையிலும் இரகசிய குறியீட்டினை எழுதிவைத்துள்ளார்.இவை அனைத்தும் வரைபடங்களிலும் ஏதோ ஓர் மர்மமான மொழியும் உள்ளது. எனவே, அவர் வரைந்துள்ள வரைபடங்கள் குறித்து தற்போது ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது.மேலும், அவரது அறையில் இத்தாலிய மெய்யியலாளர் கியோர்டானோ புரூணோ-வின் சிலை ஒன்றும் காணப்பட்டுள்ளது. 1500களில் வாழ்ந்த ஒருவர் இந்தச் சிலை எப்படி வந்தது என்பதற்கும் விடை இல்லை.வெப்துனியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக