ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

ஒரு இந்துத்வா கிரிமினல் குற்றவாளி உத்தர பிரதேச முதல்வர் ஆகியுள்ளான் .. யோகி ஆதித்தநாத் என்கின்ற பார்ப்பன பொறுக்கியின் Flashback

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் (19. 6. 2002)  :  "இந்துக்கள் அருகில் வசிக்கும் வீடுகளைத் தவிர ஏனைய அனைத்து இஸ்லாமிய இல்லங்களும் எரித்து சூறையாடப்பட்டன. ஒன்று கூட மிஞ்சவில்லை. ஒரு குண்டூசி கூட மிஞ்சவில்லை” என்று கூறினார் அந்த சம்பவம் பற்றிய நினைவு நெஞ்சில் ஆறாத தீயாக பற்றி எரிந்து கொண்டிருக்கும் ஹைஜ்ருனிஷா. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இவரது குழந்தைக்கு ஒருவேளை உணவோ, மாற்று உடை கூட இல்லாமல் தெருவிலே தத்தளித்திருக்கிறார்.
இன்று உபி முதல்வர்; அன்று? : அதிரவைக்கும் கதைகள் - முதல் பாகம்
அவர் ஒவ்வொரு வார்த்தையையும் மிகுந்த கவனத்தோடும் எச்சரிக்கை உணர்வோடும் உச்சரிக்கிறார். “ஆதித்யநாத்…. ஒரு தாக்குதலுக்கு அழைப்பு விடுத்தார்….. 19. 6. 2002 அன்று….. காலை ஒன்பது மணிக்கு…..” தொன்னூறு வயதான முகமது ஹனீஃப் அன்சாரி பதினைந்து வருடங்களுக்கு முன் நடந்த அந்த சம்பவத்தை இன்றும் தெளிவாக நினைவில் நிறுத்தியிருக்கிறார். இவரது இல்லம் உட்பட 44 முஸ்லீம் வீடுகள் உத்தர பிரதேச மாநிலத்தில் குசிநகர் மாவட்டத்தில் உள்ள மோகன் முன்டேரா கிராமத்தில் எரித்து சூறையாடப்பட்டுள்ளன.

அழுகிய நிலையில் ஒரு இளம்பெண்ணின் உடல் அந்த கிராமத்தில் கிடந்தது. அந்தப் பெண் ராஜ்பார் இனத்தை சேர்ந்தவள். 2002 ஜுன் 16 அன்று அவள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாள் என்று கூறப்பட்டது. அந்த கிராமத்தில் வாழும் முஸ்லீம் குடும்பத்தை சேர்ந்த சுலைமான் என்ற இளைஞன் அவளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டதாக அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் கூறினார்கள். அந்த இளைஞனை கைது செய்யும் வரை அந்தப் பெண்ணின் உடலை பிரேதப் பரிசோதனை செய்யவோ இறுதிச் சடங்கு நடத்தவோ அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியாகக் கூறிவிட்டார்கள் கொல்லப்பட்ட அந்த பெண்ணின் குடும்பத்தினர்.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், கோராக்பூரில் உள்ள கோராக்நாத் கோயில் பூசாரியுமான ஆதித்யநாத் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அந்த கிராமத்திற்கு வருவதாக அறிவித்தார்.


ஆதித்யநாத்தின் ஆட்கள் அந்தப் பகுதியெங்கும் இந்தச் செய்தியை பரப்பியதோடு அந்த கிராமத்தில் வாழும் இந்துக்களிடம் அங்கே ஒரு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டார்கள். இதுதான் ஆதித்யநாத்தின் அதிரடி அரசியல் பாணி.
1998ம் ஆண்டு 26 வயதில் ஆதித்யநாத் முதல் முறையாக லோக்சபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது தன்னை இந்துக்களின் காவலர் என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்டார். எப்போதெல்லாம் முஸ்லீம்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று இந்துக்கள் நினைக்கிறார்களோ அப்போதெல்லாம் அவர்களுக்கு தண்டனை வழங்கும் கூட்டத்திற்கு அவர் தலைமை வகித்தார்.

மோகன் முன்டேரா கிராமத்தில் பிற்படுத்தப்பட்ட அன்சாரி மற்றும் மன்சூரி முஸ்லீம் இனங்கள் 1999ல்தான் இந்துத்துவா என்ற தீப்பொறி கிளம்புவதை அறிந்து கொண்டன. அந்த வருடத்தில்தான் மகராஜ்கன்ஜ் மாவட்டத்தில் உள்ள பச்ருக்கியா கிராமத்தில் வாழும் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களுக்கும் இடையே உள்ள பிரச்சனையில் ஆதித்யநாத் தலையிடுகிறார். அந்த கிராமத்தில் உள்ள முஸ்லீம்களுக்கு சொந்தமான கல்லறைக்கு பக்கத்தில் இந்துக்களிடம் இடமும் இருக்கிறது. அதில் உள்ள அரச மரம் வெட்டப்பட்டது. உடனே ஆதித்யநாத் தலைமையிலான ஒரு கும்பல் அந்த கல்லறைக்கு அருகே இரண்டு டஜன் அரச மரங்களை நட்டார்கள். காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையின் படி , ஆதித்யநாத் தன் பாரதிய ஜனதா தொண்டர்களை அங்கே திரட்டிச் சென்றார். அப்போது அவர்கள் கையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயிதங்களோடு சென்றார்கள். இந்தப் பிரச்சனையில் காவல்துறையைச் சேர்ந்த ஒரு காவலர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மோகன் முன்டேரா கிராமத்தை சேர்ந்த முஸ்லீம்கள் ஆதித்யநாத் வர இருப்பதை முதல் இரவே அறிந்து மிகவும் கவலை அடைந்தனர். மறுநாள் அதிகாலையிலேயே பெண்களையும் குழந்தைகளையும் அந்த கிராமத்தவிட்டு வெளியே அனுப்பிவிட்டார்கள். அச்சத்திற்கு உள்ளான பல ஆண்கள் கூட வெளியேறிவிட்டார்கள். மிகச் சிலரே அதிலும் குறிப்பாக வயதான பெரியவர்களே அந்த கிராமத்தில் இருந்தார்கள். கோராக்பூரில் இருந்து ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அந்த கிராமத்திற்கு ஆதித்யநாத் காலை ஒன்பது மணிக்கு வந்தடைந்தார். பெரும் கூட்டம் அவர் பேச்சை கேட்பதற்கு திரண்டிருந்தது. பத்து கிலோ மீட்டர் சுற்றளவில் இருந்து மக்கள் கூட்டம் மீன்பிடிக்க ஓடிவருவது போல் வந்து சேர்ந்தது.
பெரும்பாலான முஸ்லீம்கள் தப்பியோடிவிட்ட நிலையில் அந்தக் கிராமத்து பள்ளிக்கூடத்தில் கூடிய கூட்டத்திடம் ஆதித்யநாத் இப்படிப் பேசினார், 'இந்துக்களின் ஒரு வீடு கூட எரிக்கப்பட கூடாது. ஆனால் முஸ்லீம்களின் எந்த வீட்டையும் மன்னிக்கக் கூடாது.'
"இந்துக்கள் அருகில் வசிக்கும் வீடுகளைத் தவிர ஏனைய அனைத்து இஸ்லாமிய இல்லங்களும் எரித்து சூறையாடப்பட்டன. ஒன்று கூட மிஞ்சவில்லை. ஒரு குண்டூசி கூட மிஞ்சவில்லை” என்று கூறினார் அந்த சம்பவம் பற்றிய நினைவு நெஞ்சில் ஆறாத தீயாக பற்றி எரிந்து கொண்டிருக்கும் ஹைஜ்ருனிஷா. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இவரது குழந்தைக்கு ஒருவேளை உணவோ, மாற்று உடை கூட இல்லாமல் தெருவிலே தத்தளித்திருக்கிறார்.
“அவர்கள் என் தானியக் கிடங்கில் பெட்ரோலை ஊற்றி கொளுத்தினார்கள். அந்தத் தீயில் நான் சேமித்து வைத்திருந்த தானியங்கள் அனைத்தும் எரிந்து நாசமாகிவிட்டன” என்று கூறினார் அன்சாரி. இந்த சம்பவம் நடக்கும் போது காவல்துறையினர் அங்கேதான் இருந்திருக்கிறார்கள். “இந்த மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் மிகவும் நல்லவர். அவர் துப்பாக்கிச் சூடு நடத்தி அந்த கும்பலை விரட்டியடிக்கத்தான் விரும்பினார். ஆனால் மாவட்ட நீதிபதி அதற்கு அனுமதி கொடுக்கவில்லை” என்று கூறினார் அன்சாரி.

“எல்லாம் நடந்து முடிந்த பிறகு இந்து ஜக்ரன் மஞ்ச் இயக்கத்தை சேர்ந்த இருவரை மட்டும் கைது செய்தார்கள். அவர்களும், கோபத்தை தூண்டும் உரையை நிகழ்த்தியது மற்றும் இரண்டு குழுக்களிடையே பகைமையை தூண்டியது ஆகிய பிரிவிலே கைது செய்யப்பட்டனர். பின்னர் அந்த வழக்கும் வலுவிழந்து விட்டது. அவர்கள் இருவரும் ஜாமினில் வெளியே வந்துவிட்டார்கள்” என்று கூறினார் அனைத்தும் நாசம் செய்யப்பட்ட பிறகு அந்த சம்பவத்தை பதிவு செய்த மூத்த பத்திரிகையாளரான மனோஜ் சிங்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் ஆதித்யநாத் பெயரே குறிப்பிடப்படவில்லை.
யோகி ஆதித்யநாத் இப்போது உத்தரபிரதேசத்தின் முதல்வர்.
டாக்டர் அகமது அஜிஸ், ஆதித்யநாத் உத்தர பிரதேசத்தின் முதல்வராகப் போகிறார் என்று கேள்விப்பட்ட போது முதலில் அது வெறும் ‘ஜோக்’ என்றுதான் நினைத்திருக்கிறார்.
“நாங்கள் அதைக் கேட்டு வாய்விட்டு சிரித்துவிட்டோம். ‘என்ன சொல்கிறாய் நீ? பெரும் நாச வேலைகளை செய்த ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் ஆக முடியுமா?” என்றுதான் கேட்டோம்” என்றார் அஜிஸ்.

கோராக்பூர் அருகே டாக்டர் அஜிஸ் அகமது ஒரு மருத்துவமனையை நடத்திக்கொண்டிருக்கிறார். எழுபது வயதான டாக்டர் அகமது ஒரு நாளைக்கு இருவேளை நோயாளிகளுக்கு மருத்துவம் செய்கிறார். 1999ல் இவர் சமாஜ்வாடி கட்சியில் மாநிலப் பொதுச் செயலாளராக இருந்திருக்கிறார். இப்போது இவர் காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகிக்கிறார்.
குளக்கரையை மையமாக வைத்து ஒரு பிரச்னை வெடித்தது. “இது எங்கள் கல்லறைக்கு சொந்தமான இடம்” என்று முஸ்லீம்கள் கூறினார்கள். இந்துக்களோ, “இது இறுதிச் சடங்கு செய்த பின் நாங்கள் நீராடும் இடம்” என்று கூறினார்கள். ஓர் இரவில் அந்த குளக்கரையில் வளர்ந்திருந்த அரச மரம் வெட்டப்பட்டது. இந்தக் காரியத்தை முஸ்லீம்கள்தான் செய்தார்கள் என்று குற்றம்சாட்டினார்கள் இந்துக்கள்.
1999 பிப்ரவரி 10ம் தேதி காவல்துறை அதிகாரி, ஸ்ரீவத்ஸ்வா முதல் தகவல் அறிக்கையை இப்படி பதிவு செய்திருக்கிறார், : ஆதித்யநாத் பதினைந்து கார்களில் துப்பாக்கிகளோடு தன் ஆதரவாளர்களோடு அங்கே வந்தார். அந்தக் குளக்கரையின் அருகில் ஆதித்யநாத் கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடிய உரையாற்றினார். சில சுலோகன்களை உரக்கச் சொல்லி முழக்கமிட்டார். அப்போது அங்கு கூடிய இந்துக்கள் அந்தக் குளக்கரையில் வடக்குப் பகுதியில் இருந்த முஸ்லீம் கல்லறைகளை நாசம் செய்தனர். அந்த இடத்தில் அரச மரக்கன்றுகளை நட்டனர்.
இதை போலீஸார் தடுக்க முயன்றனர். அப்போது அவர்களை மிரட்டிய நாடாளுமன்ற உறுப்பினரான ஆதித்யநாத், ஆத்திரத்தைத் தூண்டும் உரையை மீண்டும் நிகழ்த்தினார். காவல்துறையினர் அந்தக் கூட்டத்தில் சிலரை கைது செய்ய முயன்ற போது ஆதித்யநாத்தும் அவர் ஆதரவாளர்களும் காரில் ஏறி தப்பியோடினர். காவல்துறையினர் அவர்களைத் துரத்தினார்கள். தாரம்பூரில் போராட்டக் கூட்டத்தில் டாக்டர் அஜிஸ் உரையாற்றிக்கொண்டிருக்க, ஆதித்யநாத் கும்பலின் கார்கள் அந்த இடத்தை அடைந்தது. அங்கிருந்து மீண்டும் தப்பியோடும் முன்பு ஆதித்யநாத் கட்டளையிட, அவரது ஆதரவாளர்களில் ஒருவர் துப்பாக்கியை எடுத்து சுட்டார். அந்தத் துப்பாக்கி குண்டு டாக்டர் அஜிஸின் பாதுகாவலராக இருந்த தலைமைக் காவலர் சத்யப்பிரகாஷ் யாதவின் நெஞ்சில் பாய்ந்தது. அதே இடத்தில் சுருண்டு விழுந்து மரணித்தார் அவர். இதையடுத்து ஆதித்யநாத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது கொலை முயற்சி, வணக்கத்திற்குரிய இடத்தில் கலகம் செய்தல், பகையை தூண்டுதல், குற்றவியல் நடவடிக்கை, அச்சுறுத்தல் போன்ற பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது.
பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இரண்டு வருடங்கள் கழித்து, ‘தலைமைக் காவலரைக் துப்பாக்கியால் யார் சுட்டது என்பது ஆதாரத்தோடு நிரூபிக்கப்படவில்லை’ என்று அறிக்கையை சமர்பித்தது சிபிசிஐடி. நீதிமன்றம் டாக்டர் அஜிஸிடம் இந்த வழக்கை முடித்துவிடலாமா என்று கேட்டிருக்கிறது. ஆனால் அதை மறுத்துவிட்டார் டாக்டர் அஜிஸ். எனவே அந்த வழக்கு இன்னும் உள்ளூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
தொடரும்…
- சுப்ரியா சர்மா
தமிழில் : வேட்டை பெருமாள்
நன்றி : scroll.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக